துவாசில் உள்ள ஆலைத் தீ விபத்தில் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
எண் 21, துவாஸ் அவென்யூ 3ல் உள்ள ஆலை ஒன்றில் நேற்று காலை எரிவாயு உருளைகள் வெடித்ததில் மூண்ட
தீ விபத்தில் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் குறித்து தனக்கு காலை 9.05 மணிக்குத் தகவல் கிடைத்தது என்றும் தீயை நீரைப் பீய்ச்சியடைக்கும் இயந்திரத்தின் துணையுடன் அணைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இத்தீ விபத்தில் சிக்கிய 38 வயது ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தி னார். மற்றோர் ஊழியரான 43 வயது ஆடவர் சுயநினை வுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்துக்கு வந்து சேர்வதற்குள் சுமார் 40 பேர் அவ்விடத்தி லிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
கவிமாலைச் சந்திப்பில் தமிமுன் அன்சாரி, அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திரச் சந்திப்பை நடத்தி வருகிறது. கவிமாலையின் 271வது சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5, பாசிபிலிட்டி அறையில் நடைபெறும்.
இம்மாதச் சந்திப்பில், தமிமுன் அன்சாரி 'மக்கள் குரலாய் மண்ணின் கவிதைகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார். அதோடு அந்தமான் கிருஷ்ணமூர்த்தி அந்தமானில் தமிழர்களும் தமிழும் என்பது குறித்து பகிர்ந்துகொள்வார்.
இந்நிகழ்வினை கவிஞர் மாரிமுத்து ஒருங்கிணைப்பு செய்ய பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல், 'தீராக்கணக்கு' எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல் மற்றும் பரிசளிப்பும் இடம்பெறவிருக்கிறது. மேலும் கவிஞர் பிரபாதேவி வழிநடத்தும் போட்டி கவிதை விமர்சன அங்கமும் கவிஞர் வெற்றிசெல்வனின் நூல் அறிமுக அங்கமும் உண்டு. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
மார்சிலிங் தீ: ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
மார்சிலிங் கிரசென்ட் புளோக் 20ல் உள்ள ஹெங் ஹோக் கடைக்கு முன்புறத்தில் கடந்த புதன்கிழமை 37 வயது டான் கிம் ஹீ மீது தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி, அவரை உயிருடன் கொளுத்த முயன்ற 65 வயது டே கெங் ஹோக் மீது நேற்று நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. புதன்கிழமை இரவு 10.10 மணிக்கு தகவல் கிடைத்து விரைத்த காவல்துறை அதிகாரிகள், அங்கு தீக் காயங்களுடன் டான் விழுந்துகிடப்பதைக் கண்டார்கள். அவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டே சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

