ஜூரோங் பறவை பூங்கா: அலைமோதும் கூட்டம்

ஜூரோங் பறவை பூங்கா: அலைமோதும் கூட்டம்

1 mins read
2f451218-b512-4744-bb63-8a5ec9eceae4
-

ஜூரோங் பறவை பூங்கா 1971ல் திறக்­கப்­பட்­டது. அது முதல் 40 மில்­லி­ய­னுக்­கும் அதிக பார்­வை­யா­ளர்­களை அது கவர்ந்து ஈர்த்து இருக்­கிறது.

அந்­தப் பறவை பூங்கா மூடப்­ப­ட­வி­ருப்­ப­தாக கடந்த ஆகஸ்ட்­டில் அறி­விக்­கப்­பட்­டது.

அது முதல் அந்­தப் பூங்­கா­வுக்கு வந்து செல்­வோ­ரின் எண்­ணிக்கை ஏறத்­தாழ இரண்டு மடங்­கா­கி­விட்­ட­தாக அதை நிர்­வ­கித்து நடத்­தும் மண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மம் தெரி­வித்­துள்­ளது.

எல்­லா­வற்­றுக்­கும் உச்­ச­மாக டிசம்­பர் 26ஆம் தேதி­யன்று ஒரே நாளில் அந்­தப் பூங்­கா­விற்கு 8,000 பேர் வந்து சென்­ற­னர். இது அன்­றாட சரா­சரி எண்­ணிக்­கை­யைப் போல நான்கு மடங்­கா­கும் என்­பது குறிப்­பிடத்­தக்­கது.

பூங்கா ஜன­வரி 3ஆம் தேதி மூடப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது. இந்த அறி­விப்­பைத் தொடர்ந்து நவம்­பர் 19 முதல் ஜன­வரி 3 முதல் நுழை­வுச் சீட்டு வெறும் 10 வெள்­ளிக்கு விற்­கப்­படு­கிறது.

அந்­தப் பூங்கா மூடப்­பட்ட பிறகு அது மண்­டாய் வன­விலங்கு காப்­ப­கத்­தில் அமையவுள்ள பற­வைப் பூங்­கா­விற்கு இடம் மாறும்.

பூங்­கா­வின் சுமார் 130 ஊழி­யர்­களும் ஏறக்­கு­றைய 3,500 பற­வை­களும் புதிய இடத்­திற்­குச் செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றார்­கள்.