குறைந்த வருவாய் குடும்பங்களை ஊக்குவிக்க புத்தாண்டு கேளிக்கை

2 mins read
1942cc54-b710-41a2-9099-d18894be5e87
-

ரச்­சனா வேலா­யு­தம்

வாடகை வீடு­களில் வசிக்­கின்ற கிட்டத்தட்ட 100 குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளுக்கு ஆதரவு அளித்து அவற்றை ஊக்­கு­விக்க கம்­போங்-கெம்­பாங் சமூக மன்­றத்­தில் நேற்று கேளிக்கை நிகழ்ச்சி நடந்­தது.

அத்­த­கைய குடும்­பங்­க­ளுக்­குத் தேவை­யான பொருள்­களும் பற்­றுச்­சீட்­டு­களும் அன்­ப­ளிப்­பாகக் கொடுக்­கப்­பட்­டன.

'ஹோப் இனி­ஷி­யே­டிவ் அலெ­யன்­சஸ்' என்ற சமூக அமைப்­பின் 'தி அல்­ஃபா­பட் புரொ­ஜெக்ட்' என்ற செயல்­திட்­டத்­தை­யொட்டி நடந்த அந்­தக் கேளிக்கை நிகழ்ச்­சி­யில் மந்­தி­ரக் காட்சி, ஆடல், பாடல், அதிர்ஷ்­டக் குலுக்கு போன்ற பல­வும் இடம்­பெற்­றன.

சிறார்­கள் பல்­வேறு விளை­யாட்­டு­களில் கலந்­து­கொண்டு தின்­பண்­டங்­க­ளைச் சுவைத்தனர்.

நிகழ்ச்­சி­யில் நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொ­ண­டார். "நாம் நம்மை கவ­னித்­துக் கொள்­வ­தோடு நம்­மைச் சுற்றி இருப்­ப­வர்­க­ளை­யும் கவ­னித்­துக் கொள்ள வேண்­டும்," என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

குறைந்த வரு­மானக் குடும்­பங்­களுக்கு கிடைக்­கக்­கூ­டிய உதவி ­க­ளைப் பற்றி அவர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லும் தொண்­டூ­ழி­யர்­கள் முக்­கி­ய­மா­ன­வர்­கள் என்­ப­தை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இத­னி­டையே, குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளை ஆத­ரிக்­க­வும் ஊக்­கு­விக்­க­வும் அவர்­க­ளோடு சேர்ந்து இந்­தப் புத்­தாண்டு விழா­வுக்கு ஏற்­பாடு செய்­த­தாக ஹோப் இனி­ஷி­யே­டிவ் அலெ­யன்­சஸ் அமைப்­பைச் சேர்ந்த திரு­மதி நஸ்­ஹத் ஃபஹிமா கூறி­னார்.

டைனோ­சர் பற்றி சிறு­கதை ஒன்றை எழுதி மேடை­யில் எல்­லா­ருக்­கும் படித்­துக்காட்டி கைல், 8, என்ற சிறுவன், போட்டி­யில் முதல் பரிசை வென்றார்.

இது பற்றி கருத்­து­கூ­றிய கைலின் தாயார் திரு­வாட்டி பி. தெரேசா, 2022வது ஆண்டை இனிப்­பாக முடித்­து­வைத்த இந்த விழா, பிள்­ளை­க­ளுக்கு மிக­வும் உதவி இருப்­ப­தா­கக் கூறி­னார்.