அமைச்சர் பிரேசில் பயணம்

அமைச்சர் பிரேசில் பயணம்

1 mins read
9031368f-51a4-45d7-a05f-a889df0b1d25
-

பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாவது வெளியுறவு, கல்வி அமைச்சருமான டாக்டர் மாலிக்கி ஓஸ்மான், இன்று முதல் இந்த மாதம் 3ஆம் தேதி வரை பிரேசில் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சு கூறியது.

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லூயிஸ் லுலா டா சில்வா பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார்.

அமைச்சருடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் செல்கிறார்கள் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.