விசாரணையில் 444 பேர்

விசாரணையில் 444 பேர்

1 mins read
ef854c97-951b-447b-9b0c-85b12a235958
-

பல்­வேறு மோச­டி­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில் 444 பேரை காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது. அவர்­களில் 311 பேர் ஆட­வர்­கள். 133 பேர் பெண்­கள் என்று காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

அந்­தச் சந்­தேகநபர்­கள் 1,400க்கும் மேற்­பட்ட மோச­டி­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

அத்­த­கைய தில்­லு­முல்லு­களுக்கு இலக்­கா­ன­வர்­கள் $15.7 மில்­லி­ய­னுக்­கும் அதி­கத் தொகை­யைப் பறி­கொ­டுத்து இருக்­கி­றார்­கள்.

வர்த்­தக விவ­கா­ரத் துறை அதி­கா­ரி­களும் ஏழு காவல்­துறை தரைப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை எடுத்த நட­வ­டிக்­கை­களை அடுத்து இப்­போது புலன்­விசாரணை நடந்து வரு­கிறது.

சந்­தே­க­ ந­பர்­க­ளுக்கு வயது 15 முதல் 80 வரை. அவர்­கள் போலி மின்­னஞ்­சல்­கள், கடன், வேலை, இணைய வர்த்­த­கம், அர­சாங்க, சீன அதி­கா­ரி­க­ளைப் போல் நடிப்­பது ஆகி­யவை தொடர்­பான மோச­டி­க­ளை­யும் முத­லீட்டு பாணி­யி­லான மோச­டி­க­ளை­யும் அரங்­கேற்றி இருக்­கி­றார்­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்­றி­யது, கள்­ளப்­பண விவ­கா­ரம், உரி­மம் இல்­லா­மல் பணப்­பட்­டு­வா­டாச் சேவை வழங்­கி­யது போன்ற சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் அவர்­கள் ஈடு­பட்டு உள்ளதாகக் கூறப்­ப­டு­கிறது. புலன்­வி­சா­ரணை தொடர்­கிறது.