நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்ததன் மூலம் சென்ற ஆண்டில் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாட்டாளிக் கட்சி பாடுபட்டு இருக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்தார்.
பணவீக்கம், அதிக வட்டிவிகிதம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்களை நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினர்கள் எழுப்பியதாக திரு சிங் கூறினார்.
ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சமூகங்களுக்காக பாட்டாளிக் கட்சி ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளையும் தன் செய்தியில் அவர் எடுத்துக் கூறினார்.
சென்ற ஆண்டில் கட்சி மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், தொண்டூழியர்கள், குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் தம் செய்தியில் திரு சிங் நன்றி கூறினார்.

