புத்தாண்டின் முதல் குழந்தை

1 mins read
1e879c37-5049-4981-b6ff-b5fbf70f3a9a
-

புத்­தாண்டு பிறந்து சரியாக ஒரு நொடிக்­குப் பிறகு தங்­கள் முதல் குழந்­தையை பூமிக்கு வர­வேற்­ற­னர் பெற்றோர் லின் ரென்­சென், 27, லாய் ஜிங்யி, 26, இரு­வ­ரும்.

மவுண்ட் அல்­வேர்­னியா மருத்­து­வ­ம­னை­யில் பிறந்த இப்­பெண் குழந்தை பெற்­றோ­ருக்கு முதல் குழந்தை.

ஒன்பது நாள் முன்னதாகவே தங்களைக் காண வந்துவிட்ட செல்வ மக­ளுக்கு 'காய் சின்' என்று செல்­லப் பெய­ரிட்­டுள்­ள­னர் தாயும் தந்தையும்.

மாண்­ட­ரின் மொழி­யில் இதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.

மகள் அவள் விரும்பும் விதத்தில் வாழவேண்டும் என்று விருப்பம் தெரிவித்த பெற்றோர் இந்தப் பெண் குழந்தைக்கான பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினர்.