பொருள் விலையை ஒப்பிட 'பிரைஸ் காக்கி' செயலியில் புதிய அம்சம்

பொருள் விலையை ஒப்பிட 'பிரைஸ் காக்கி' செயலியில் புதிய அம்சம்

2 mins read
dc73bfd1-36fb-4e2c-bc92-b40dcb42a76b
-

வாடிக்­கை­யா­ளர்­கள் நேற்று முதல் 'பிரைஸ் காக்கி' கைப்­பே­சிச் செய­லி­யின் மூலம் பேரங்­கா­டி­களில் விற்­பனை செய்­யப்­படும் பொருள்­க­ளின் விலையை ஒப்­பிட்­டுப் பார்க்க முடி­யும்.

இதில் 1,200க்கு மேற்­பட்ட உண­வு­ வகைகள், பானங்­கள், வீட்டு உப­யோ­கப் பொருள்­கள் ஆகி­ய­வற்­றின் விலை­யைத் தெரிந்­து­கொள்­ள­லாம். செயலி, 100 கிராம் அல்­லது 100 மில்­லி­லிட்­டர் அள­வி­லான இப்­பொ­ருள்­க­ளின் விலை­யைக் காட்­டும் என்று சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் கூறி­யது.

பால், சமையல் எண்ணெய், 'சாஸ்', பொட்டலமிடப்பட்ட பானங்கள், சவர்க்காரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், சிகைப் பராமரிப்பு பொருள்கள் போன்றவற்றின் விலையை இந்தச் செயலி காட்டும்.

இதன் மூலம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யான முறை­யில் பொருள்­க­ளின் விலை தெரி­வ­தால் அவர்­கள் அன்­றா­டத் தேவைக்­கான அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளின் விலையை ஒப்­பிட்­டுப் பார்த்து வாங்­கு­வது எளி­தா­கும் என்று சங்­கம் குறிப்­பிட்­டது.

வர்த்­த­கச் செல­வு­கள் அதி­க­ரிக்­கும் நிலை­யில் சில உற்­பத்­தி­யா­ளர்­கள் விலையை ஏற்­றா­மல் பொட்­ட­லங்­களில் பொருள்­க­ளின் அள­வைக் குறைக்­கக்­கூ­டும்.

எனவே 100 கிராம் அல்­லது 100 மில்­லி­லிட்­டர் அள­வி­லான பொரு­ளின் விலை­யைத் தெரிந்து­கொண்டு வாடிக்­கை­யா­ளர்­கள் பொருள்­க­ளைத் திட்­ட­மிட்டு வாங்க இய­லும்.

இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டிற்­குள் 6,000க்கு மேற்­பட்ட பொருள்­க­ளுக்கு இவ்­வாறு விலை­யைச் செய­லி­யில் காட்­டு­வது இலக்கு என்று அது குறிப்பிட்டது.

'பிரைஸ் காக்கி' கைப்­பே­சிச் செய­லியை 2019ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் அறி­மு­கம் செய்­தது.

இதில் தற்­போது 10,000க்கு மேற்­பட்ட பொருள்­க­ளின் விலை குறித்த தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

மளி­கைச் சாமான்­கள், பேரங்­கா­டி­களில் விற்­கப்­படும் வீட்டு உப­யோ­கப் பொருள்­கள் போன்­றவை இவற்­றில் அடங்­கும். மேலும் உண­வங்­கா­டி­கள், உண­வுக் கடை­கள் ஆகி­யவை விற்­கும் 31,000 சமைத்த உணவு­ வ­கை­க­ளின் விலை­யை­யும் இதன் மூலம் அறிந்­து­கொள்­ள­லாம்.

சென்ற ஆண்டு கூடுதலான வாடிக்கையாளர்கள் உள்ளூர்த் தயாரிப்புகளை நாடுவது தெரியவந்ததாக சங்கம் கூறியது. இப்பொருள்கள் வணிக முத்திரை பெறப்பட்ட அதே பொருள்களைவிட 10 முதல் 25 விழுக்காடு குறைவு என்பதை அது சுட்டியது.