'யூத்லைன்' மனநல ஆலோசனை: அதிகரிக்கும் உதவி அழைப்புகள்

'யூத்லைன்' மனநல ஆலோசனை: அதிகரிக்கும் உதவி அழைப்புகள்

1 mins read
b2565eb7-e8f5-40a3-b562-78ba18dbe7e3
-

'யூத்­லைன்' எனும் லாப நோக்­க­மற்ற அமைப்­பின் இளை­யர் மன­நல ஆலோ­ச­னைச் சேவை சென்ற ஆண்டு நவம்­ப­ரில் தொடங்­கப்­பட்­டது.

தோ பாயோ­வில் உள்ள அகேப் வில்­லே­ஜில் இது இயங்கி ­வ­ரு­கிறது. இன, சமய பேதம் இன்றி 18 முதல் 35 வயது வரை­யி­லா­னோ­ருக்கு இல­வ­ச­மாக ஆலோ­ச­னைச் சேவை வழங்­கு­வது இதன் நோக்­கம்.

இதில் 307 தொண்­டூ­ழி­யர்­கள் இணைந்து சேவை­யாற்றி வரு­கின்­ற­னர். இச்­சேவை தொடங்­கிய முதல் வாரத்­தில் 170 பேர் உதவி கேட்டு அழைத்­த­தா­க­வும் மறுவாரத்­தில் இந்த எண்­ணிக்கை இரு­ம­டங்­கா­ன­தா­க­வும் கூறப்­பட்­டது.

அழைத்த இளை­யர்­கள் பெரும்­பா­லும் தனிமை, குடும்ப விவ­கா­ரங்­கள், படிப்பு போன்­றவை தொடர்­பான சிக்­கல்­கள் இருப்­ப­தா­கக் கூறி­னர்.

இளை­யர்­க­ளின் தேவை­கள் தனித்­து­வம் வாய்ந்தவையாக இருக்­கும் வேளை­யில் மன­ந­லப் பிரச்­சி­னை­கள்­தான் அவர்­கள் எதிர்­கொள்­ளும் மிகப் பெரிய சவால்­க­ளாக இருக்­கின்­றன என்று 'யூத்­லைன்' கூறி­யது.

சேவைக்­கான தேவை அதி­க­ரிக்­கும் நிலை­யில், இந்த ஆண்­டின் பிற்­பா­திக்­குள் ஐந்து மில்­லி­யன் வெள்ளி நிதி திரட்ட இவ்­வ­மைப்பு திட்­ட­மிட்­டுள்­ளது.

பெரிய அலு­வ­ல­கம், நிரந்­தர ஊழி­யர்­கள் ஆகிய அம்­சங்­களுக்கு இத்­தொகை உத­வும்.