உட்புற காற்றுத்தர மேம்பாடு: அரசாங்கம் தீவிர பரிசீலனை

உட்புற காற்றுத்தர மேம்பாடு: அரசாங்கம் தீவிர பரிசீலனை

2 mins read
f36c09f2-9c15-4404-8d4b-ec6392a342a0
-

கட்­டு­மா­னப் பொருள்­க­ளி­லும் அறை­க­லன்­க­ளி­லும் 'ஃபார்மால்­டி­ஹைடு' எனும் வேதிப்­பொ­ரு­ளின் உமிழ்வு வரம்பு குறித்து தொழில் நிறு­வ­னங்­கள் அளித்­துள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் மிகத் தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­துள்­ளார்.

கார­நெ­டி­யு­டன் கூடிய அந்த வேதிப்­பொ­ருள், உடல்­ந­லத்­திற்­குக் கேடு விளை­விக்­கும் துகள்­களை வெளி­யி­டு­கிறது. அத்­து­கள்­களை அதிக அள­வி­லும் வெகு­கா­ல­மும் சுவா­சிக்­கும்­போது, புற்­று­நோ­யால் பாதிக்­கப்­படக்­கூ­டும்.

உட்­பு­றங்­களில் சுவா­சிக்­கப்­படும் காற்­றா­னது தூய்­மை­யாக இருப்­பதை உறு­தி­செய்­வ­தற்­கான 'நீடித்து நிலைக்­கத்­தக்க வெளி­களுக்­கான செயற்­கூட்­டணி'யின் வழி­காட்டி நெறி­மு­றை­கள், பரிந்­து­ரை­கள் அறி­முக நிகழ்ச்­சி­யின்­போது அமைச்­சர் ஃபூ பேசி­னார்.

சிங்­கப்­பூர் தொழில் கூட்­ட­மைப்பு, சிங்­கப்­பூர் அறை­க­லன் தொழி­லக மன்­றம், சிங்­கப்­பூர் பசு­மைக் கட்­டட மன்­றம் ஆகி­யவை இணைந்து 2021 நவம்­ப­ரில் அந்­தச் செயற்­கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்­தின.

விற்­ப­னைக்­கு­முன் அனைத்­துப் பொருள்­க­ளுக்­கும் உமிழ்­வுச் சோதனை அறிக்­கை­களை நிறு­வ­னங்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் உமிழ்வு வரம்­பு­க­ளுக்கு அவை உட்­ப­டு­கின்­றன என்­ப­தற்­கான சான்றை நிறு­வ­னங்­கள் வழங்க வேண்­டும் என்­றும் அந்­தச் செயற்­கூட்­டணி பரிந்­து­ரைத்­துள்­ளது.

மோச­மான காற்­றோட்ட வசதி மற்­றும் காற்­றுத்­த­ரம் கார­ண­மாக கொவிட்-19 பர­வு­வ­தால், அர­சாங்­க­மும் தொழில் நிறு­வ­னங்­களும் அப்­பி­ரச்­சி­னையை எதிர்­கொண்டு வரு­கின்­றன. இந்­நி­லை­யில், இந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

"கொவிட்-19 பர­வ­லா­னது நல்ல காற்­றோட்­டம், சரி­யான இடை­வெளி போன்­றவை குறித்து உண­ரும்­படி செய்­துள்­ளது," என்­றார் திரு­வாட்டி ஃபூ.

மக்­கள் கிட்­டத்­தட்ட 90 விழுக்­காட்டு நேரத்தை உட்­பு­றங்­களில் செல­வி­டு­வ­தால், மோச­மான காற்­றுத்­த­ரத்­தால் அவர்­க­ளின் உடல்­ந­லம் பாதிக்­கும் அபா­யம் ஏற்­ப­ட­லாம் எனக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கூட்­ட­ணி­யின் ஒழுங்­கு­மு­றைப் பரிந்­து­ரை­களை ஏற்­றுக்­கொள்­ளு­முன், எவ்­வி­டங்­களில் உமிழ்­வு­கள் தீங்கு விளை­விக்­கும், எவற்­றை­யெல்­லாம் ஒழுங்­கு­ப­டுத்த வேண்­டும் என்­பன உள்­ளிட்ட வரை­மு­றை­களை அர­சாங்­கம் பரி­சீ­லிக்க வேண்டி இருக்­கும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"எல்லா நேரங்­க­ளி­லும் தர­நிலை­கள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன என்­பதை ஒழுங்­கு­விதி உறு­திப்­படுத்­தாது. அதன்­பின் சோத­னை­க­ளை­யும் அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளை­யும் நாம் மேற்­கொண்­டாக வேண்­டும்," என்­றார் அவர்.

கட்­டு­மா­னப் பொருள்­கள் மற்­றும் உள்­ள­லங்­கா­ரப் பொருள்­களுக்­கான உமிழ்வு வரம்­பு­கள், உட்­புற நல்ல காற்­றுத்­த­ரத்­திற்­கான தர­நி­லை­க­ளைப் பேணு­தல், உட்­பு­றங்­களில் நல்ல காற்­றுத்­தரத்­தைப் பேண எடுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்­கான அங்­கீ­கா­ரச் சான்­றி­தழ்­கள், வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார வழி­காட்டு­தல்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­தல், உட்­பு­றக் காற்­றுத்­த­ரத்­தைக் கண்­கா­ணித்­தல் போன்­றவை கூட்­டணி­யின் வழி­காட்டு நெறி­மு­றை­களில் இடம்­பெற்­றுள்­ளன.

குறைந்த உமிழ்வு கொண்ட பொருள்­களை உரு­வாக்கவும் தொழில்­துறை-பொது­மக்­கள் இடையே சிறந்த ஒத்­து­ழைப்பை ஏற்­ப­டுத்­த­வும் ஊக்குவிக்கப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.