இன்று முதல் 'மெகா இந்தியா எக்ஸ்போ' கண்காட்சி

இன்று முதல் 'மெகா இந்தியா எக்ஸ்போ' கண்காட்சி

1 mins read
16c89ff9-9f14-4310-8c84-1423ec30a317
-

ஆ. விஷ்ணு வர்­தினி

புத்­தாண்­டை­யும் பொங்­க­லை­யும் எதிர்­நோக்கி ஏற்­பா­டாகி இருக்­கும் மெகா இந்­தியா எக்ஸ்போ கண்­காட்­சி­யா­னது இன்று முதல் ஞாயிறு இரவு வரை சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடை­பெ­றும்.

புகழ்­பெற்ற 'லவ் டுடே' தமிழ் திரைப்­ப­டத்­தின் கதா­நா­ய­கர்­க­ளான பிர­தீப் ரங்­க­நா­தன், இவானா ஆகி­யோர் இன்று கண்­காட்­சி­யில் பங்­கு­பெ­று­வர்.

அதை தவிர்த்து, இன்று சிங்­கப்­பூ­ரர்­களை அங்­கீ­க­ரிக்­கும் 'சிந்­தி­யன்' பரி­ச­ளிப்பு விழா, சிண்­டா­வின் அறி­முக நிகழ்ச்சி, 'மெகா கேம்' விளை­யாட்டு ஆகி­ய­வை­யும் இடம்­பெ­றும்.

நாள்­தோ­றும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை இந்த இல­வச கண்­காட்சி மக்­க­ளின் பார்­வைக்­காக இருக்­கும். மொத்­தம் 150 உள்­ளூர், வெளி­யூர் வர்த்­த­கங்­கள் இக்­கண்­காட்­சி­யில் பங்கு­பெற உள்­ளன.

இந்­தி­யா­வில் ஹைத­ரா­பாத், ஜெய்­பூர், புதுடெல்லி முத­லிய பல்­வேறு மாநி­லங்­களில் இயங்­கும் வர்த்­த­கங்­க­ளின் பொருட்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் ­கண்­காட்­சிக்கு வருகையளிக்கும் மக்­கள் அணு­க­லாம்.

ஆடை அணி­க­லன்­கள், வீட்­டு­ உப­யோகப் பொருட்­கள், அறை­க­லன்­கள் முத­லி­ய­வற்றை வழங்­கும் இக்­கண்­காட்­சி­யில், புது வர­வு­க­ளை­யும் வேறு­பட்ட வடி­வ­மைப்­பு­க­ளை­யும் மக்­கள் எதிர்­பார்க்க­லாம்.

ஷாபாஸ் நிறு­வ­னத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெ­றும் இந்­நி­கழ்வு மக்­களை பல­த­ரப்­பட்ட பொருட்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தோடு, உள்­ளூர் வெளி­யூர் வர்த்­த­கங்­கள் சந்­திப்­ப­தற்­கான தள­மா­க­வும் விளங்க முயற்சி செய்­துள்­ளது.

புது கூட்டுறவுகளை ஏற்­படுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­களை இங்கு வர்த்­த­கங்­கள் கண்­டறியக்கூடும் என்­று கூறுகிறது, ஷாபாஸ் நிறு­வ­னம்.