மூதாட்டியைக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

மூதாட்டியைக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

1 mins read
b3ba5818-85db-4742-a2ea-24b810bb6006
-

இர­வில் வெளியே செல்ல வலி­யு­றுத்­திய மூதாட்­டி­யைக் காயப்­படுத்­திய பணிப்­பெண்­ணுக்கு 14 வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மற­தி­நோ­யால் பாதிக்­கப்­பட்ட திரு­வாட்டி லியோங், சென்ற ஆண்டு அக்­டோ­பர் 3ஆம் தேதி இர­வில் வெளியே செல்­ல­வேண்­டும் என்று பணிப்­பெண் யாத்­தி­யி­டம் கூறி­னார்.

வெளியே மிக­வும் இருட்­டாக இருக்­கிறது என்று விளக்­கிய பிற­கும் மூதாட்டி அடம்­பி­டித்­த­தா­கக் கூறப்­பட்­டது. அத­னால் யாத்தி அவ­ரது கன்­னங்­க­ளைப் பிடித்து, தாடையை அழுத்தி அமை­திப்­ப­டுத்த முயன்­றார்.

தனக்கு அப்­போது தலை­வலி இருந்­த­தா­க­வும் தன்­னால் உணர்­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ள இய­ல­வில்லை என்­றும் கூறிய யாத்தி, மூதாட்­டி­யின் முகத்தை விரல்­க­ளால் அழுத்­தித் தேய்த்­த­து­டன் சில முறை லேசா­கத் தட்­டி­ய­தா­க­வும் கூறி­னார்.

மறு­நாள் திரு­வாட்டி லியோங்­கின் முகத்­தில் சிராய்ப்­புக் காயங்­கள் தென்­ப­டவே அவ­ரது மக­னைத் தொலை­பே­சி­யில் அழைத்த பணிப்­பெண், மூதாட்டி கீழே விழுந்­து­விட்­ட­தா­கப் பொய்­யு­ரைத்­தார்.

மருத்­து­வர் சந்­தே­கப்­பட்­ட­தால் கண்­கா­ணிப்­புக் கேம­ராப் பதி­வு­க­ளைப் பார்த்த மகன், யாத்­தி­யின் நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டு­பி­டித்­தார். பின்­னர் காவல்­து­றை­யி­ன­ரி­டம் யாத்தி உண்­மையை ஒப்­புக்­கொண்­டார். நீதி­மன்­றத்­தி­லும் தன்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.