புளோக் அருகே வாயுக்கசிவு: 150 பேர் வெளியேற்றம்

புளோக் அருகே வாயுக்கசிவு: 150 பேர் வெளியேற்றம்

1 mins read
deb7614c-e9e6-4efd-bd27-3ce8967c882f
-

அங் மோ கியோ­வில் இருக்­கும் வீவக புளோக் ஒன்­றில் வசிப்­போரில் 150க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வெள்­ளிக்­கி­ழமை இரவு நேரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

எளி­தில் தீப்­பி­டித்து எரி­யக்­கூ­டிய வாயு காற்­றில் கசிந்­ததே அதற்­கான கார­ணம்.

அங் மோ கியோ அவென்யூ 10 புளோக் 401க்கு அருகே வாயுக்கசிவு பற்றி இரவு 10 மணிக்கு தங்­க­ளுக்­குத் தகவல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­துக்கு விரைந்­த­னர். தீப்­பி­டித்து எரி­யக்­கூ­டிய பொருள்­க­ளைக் கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய கரு­வி­கள் மூலம் அந்­தப் பகு­தி­யில் காற்­றில் வாயு கலந்­தி­ருந்­தது தெரி­ய­வந்­தது. தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடித்து அந்­தப் படை­யி­னர் வாயு­வைக் கலைத்­த­னர்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அந்­தப் புளோக்­கைச் சேர்ந்த 150க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளைப் பாது­காப்­பாக வேறு இடத்­திற்கு அதி­கா­ரி­கள் அப்­பு­றப்­ப­டுத்­தி­னர்.

பாதிக்­கப்­பட்ட புளோக்­குக்கு அருகே நடக்­கும் வேலை­களில் இருந்து அந்த வாயு கசிந்­த­தாக தெரி­ய­வந்­தது என்று குடி­மைத் தற்­காப்­புப் படை பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

ஒரு­வ­ருக்­குச் சுக­வீ­னம் ஏற்­பட்­டது என்­பது அந்த இடத்­தில் இருந்த தற்­காப்­புப் படை மருத்­து­வர் மூலம் தெரி­ய­வந்­தது. என்­றா­லும் அவர் மருத்­து­வ­மனை செல்ல மறுத்­து­விட்­டார்.