அறப்பணி: ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்பளிப்பு

2 mins read
2b9db78b-d330-403c-922e-bcfae42f36da
-

சிங்­கப்­பூ­ரில் சீனப் புத்­தாண்டு இம்­மா­தம் 22, 23ஆம் தேதி­களில் கொண்­டா­டப்­ப­டு­கிறது. அதற்கு முன்­ன­தாக நேற்று பல்­வேறு அறப்­பணி நிகழ்ச்­சி­கள் இடம்­பெற்­றன.

அவற்­றில் ஆயி­ரக்­க­ணக்­கான தொண்­டூ­ழி­யர்­களும் நன்­கொ­டை­யா­ளர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

வரு­டாந்­திர ஃபூ தாய் நிகழ்ச்­சி­யின் மூலம் 6,000 குடும்­பங்­க­ளுக்­கும் 2,500 முதி­யோ­ருக்­கும் 8,500க்கும் மேற்­பட்ட அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

அவற்­றில் உண­வுப்­பொ­ருள்­களும் பான­மும் இதர பொருள்­களும் இருக்­கும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் உள்­ளிட்ட தொண்­டூ­ழி­யர்­கள் நேற்று நாடு முழு­வ­தும் பல வீடு­க­ளுக்­கும் சென்று அந்­தப் பைகளை வழங்­கி­னார்­கள்.

அன்­ப­ளிப்­புப் பையில் அத்­தி­யா­வ­சிய உண­வுப்­பொ­ருள்­கள் அடங்கி இருக்­கின்­றன.

குடும்­பங்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய செலவு கணி­ச­மா­கக் குறை­யும் என்று சமூக உண்­டி­யல் தலை­வர் சியூ சுடாட் கூறி­னார்.

சிறப்பு தேவை­யுள்ள சிறார்­கள், பாதிப்­பு­களை எதிர்­நோக்கி உள்ள இளை­யர்­கள், உடற்­கு­றை­யா­ளர்­கள், மன­ந­லப் பிரச்­சினை உள்­ள­வர்­கள், உதவி தேவைப்­படும் நிலை­யில் உள்ள குடும்­பங்­கள், முதி­ய­வர்­கள் பல­ருக்­கும் உத­விக்­க­ரம் நீட்­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் புத்­திஸ்ட் லாட்ஜ் அமைப்பு தலா $250 அடங்­கி­யுள்ள ஆங்­பாவை நேற்று 3,000க்கும் மேற்­பட்ட முதி­யோ­ருக்கு வழங்­கி­யது.

இந்த அமைப்பு சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழைய அறப்­பணி அமைப்­பு­களில் ஒன்­றா­கும். 1949 முதல் இந்த அமைப்பு ஆங்­பாவை வழங்கி வரு­கிறது. இது நாளை முதல் மேலும் 2,500 பேருக்கு ஆங்­பாவை வழங்­கும்.

முதி­யோர் விடு­தி­களில் வசிக்­கும் 8,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு தலா $10 உடன் கூடிய ஆங்­பாவை வழங்­கும்.

இந்த அமைப்­பின் அறப்­பணி நிகழ்ச்­சி­யில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கலந்­து­கொண்­டார்.

குவீன்ஸ்­ட­வு­னில் வசதி குறைந்த 250 பேர் மளி­கைக் கடை­க­ளுக்­குத் தொண்­டூ­ழி­யர்­கள் உத­வி­யு­டன் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

அங்கு அவர்­கள் விரும்­பிய பொருள்­களை வாங்­கிக் கொள்­ளத் தோதாக தலா $50 மதிப்­புள்ள ஷெங் ஷியோங் பற்­றுச்­சீட்­டு­கள் கொடுக்­கப்­பட்­டன. அவற்­றின் மொத்த மதிப்பு $12,500 என்று தெரி­விக்­கப்­பட்­டது.