எஸ்எம்யு சட்டப்பள்ளிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குடும்பம் $20 மி. கொடை

எஸ்எம்யு சட்டப்பள்ளிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குடும்பம் $20 மி. கொடை

1 mins read
38d433ca-2dc0-4045-87dd-124061abb3f6
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கால­மான முன்­னாள் தலைமை நீதி­பதி யோங் பங் ஹாவ் குடும்பம் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­கழக (எஸ்எம்யு) சட்­டப்பள்­ளிக்கு $20 மில்லி­யன் நன்­கொடை வழங்கியுள்ளது.

அந்­தத் தொகை­யைக் கொண்டு மாண­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­படும். ஆய்­வுப் பேரா­ளர்­கள் செயல்­திட்­டம் நடை­மு­றைப்­ப­டு­த்தப்­படும். ஆய்வு நிதி ஒன்­றும் ஏற்­ப­டுத்­தப்­படும். எஸ்எம்யு விடுத்த அறிக்கை இதனைக் கூறியது.

திரு யோங் 2020 ஜன­வரி­யில் மர­ணம் அடைந்தார். அதை­யடுத்து 2021ல் எஸ்எம்யுவின் சட்­டப்பள்­ளிக்கு யோங் பங் ஹாவ் சட்­டப் பள்ளி என்று பெயர் மாற்­றப்­பட்­டது. அந்­தப் பள்­ளி­யின் 15வது ஆண்­டு­விழா கொண்­டாட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக நன்­கொடை வழங்­கப்­பட்­டது.

திரு யோங் 2008லிருந்து 2010 வரை இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இணை வேந்­த­ரா­க­வும் 2010 முதல் 2015 வரை வேந்­த­ரா­க­வும் சேவை­யாற்றி இருக்­கி­றார்.

பல்­க­லைக்­க­ழக சட்­டப் பள்­ளி­யின் ஆலோ­ச­னைக் கழகத்தை நிறு­விய திரு யோங், 2007 முதல் 2011 வரை அதன் தலை­வ­ரா­க­வும் செயலாற்றி அந்­தப் சட்­டப்பள்ளி பாடத்­ திட்­டத்தை உரு­வாக்க பெரி­தும் உத­வி­னார்.

தன்­னு­டைய கண­வ­ரைப் பெரு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த நன்­கொ­டையை வழங்கி இருப்­ப­தாக திரு­வாட்டி யோங் வெய் வூ தெரி­வித்­தார்.