சாலை சந்திப்பில் விபத்து; மருத்துவமனையில் இருவர்

சாலை சந்திப்பில் விபத்து; மருத்துவமனையில் இருவர்

1 mins read
827e4f50-8b49-4384-b663-7befda927330
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அப்­பர் சிராங்­கூ­னில் சாலை சந்­திப்பு ஒன்­றில் டாக்சி ஒன்­று­டன் மாடிப் பேருந்து ஒன்று மோதி­விட்­டது. அதன் விளை­வாக இரண்டு பேர் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அந்த விபத்­தைக் காட்­டும் காணொ­ளியை எஸ்ஜி ரோடு விஜி­லண்ட் அமைப்பு ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றி­யது.

அந்த விபத்து பற்றி ஜனவரி 5ஆம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்துறை தெரி­வித்­தது.

விபத்­தில் சிக்­கிய பேருந்து ஓட்­டு­ந­ரான 58 வயது ஆட­வ­ரும் டாக்சி ஓட்­டு­ந­ரான 67 வயது ஆட­வ­ரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது சுய­நி­னை­வு­டன் இருந்­த­னர்.

பேருந்து ஓட்­டு­நர் புலன்­விசா­ரணை­யில் உதவி வரு­வ­தா­க­வும் விசா­ரணை தொடர்­வ­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்து உள்ளது.

அந்த விபத்து பற்றி சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. இரண்டு பேர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

இவ்­வே­ளை­யில், அந்த விபத்­தில் பேருந்­துப் பய­ணி­கள் யாருக்­கும் காய­மில்லை என்­றும் அது பற்றி தான் புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­வ­தாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் நேற்று குறிப்­பிட்­டது.

அப்­பர் சிராங்­கூன் ரோடும் பார்ட்லி ரோடும் சந்­திக்­கும் இடத்­தில் பச்சை விளக்கு எரிந்­த­போது டாச்சி சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது பேருந்து அதன்­மீது மோதி­விட்­டது என்று அந்த நிறு­வ­னத்­தின் துணைத் தலை­வர் திரு­வாட்டி கிரேஸ் வூ கூறி­னார்.