டுவிட்டர் சிங்கப்பூர், டப்ளின் அலுவலக ஊழியர்கள் பாதிப்பு

டுவிட்டர் சிங்கப்பூர், டப்ளின் அலுவலக ஊழியர்கள் பாதிப்பு

1 mins read
bf039b4f-0425-41bd-bf72-8a9ff5659baa
படம்: பிக்ஸாபே -

உல­கின் மிகப் பிர­பல சமூக ஊட­க­மான டுவிட்­டர் இப்­போது எலோன் மஸ்க் என்ற தனிநப­ரின் சொந்த சொத்­தாக ஆகி இருக்­கிறது. எலோன் மஸ்க் வசம் அந்த நிறு­வ­னம் வந்த உட­னேயே அவர் ஆட்­கு­றைப்பைக் கையில் எடுத்­தார்.

டுவிட்­ட­ரில் உல­க­ளா­விய நிலை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய தக­வல்­க­ளைத் தரச் சீர­மைக்­கும் பொறுப்­பில் இருக்­கும் நம்­பிக்கை, பாது­காப்பு ஊழி­யர் அணி ஏற்­கெ­னவே குறைக்­கப்­பட்­டு­விட்­டது.

இந்த நிலை­யில், அந்த அணி­யி­லும் வெறுப்­புப் பேச்சு, அலைக்­க­ழிப்பு ஆகியவை தொடர்­பான ஊழி­யர் அணி யிலும் மேலும் ஆட்­கு­றைப்பு இடம்பெற்று இருக்­கிறது.

இதன் கார­ண­மாக டப்­ளின், சிங்­கப்­பூர் டுவிட்டர் அலு­வலகங்­களில் வெள்­ளிக்­கி­ழமை இர­வில் குறைந்­த­பட்­சம் மேலும் 12 பேர் வேலை இழந்­த­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­திற்­கான டுவிட்­டர் பக்க நேர்மை துறை தலை­வ­ராக இருந்த நூர் அஸ்­ஹார் ஐய்­யூப், வரு­வாய் கொள்கைக்­கான மூத்த இயக்­கு­நர் அன­லு­சியா டோமின்­குஸ் அவர்களில் இருவர்.

டுவிட்­ட­ரின் பொய்த் தக­வல், கொள்கை, உலக கோரிக்கை, அரசு ஊட­கம் ஆகி­ய­வற்றைக் கையா­ளும் குழு­வைச் சேர்ந்­த­வர்­களும் ஆட்­கு­றைப்­புக்கு ஆளாகி இருக்­கி­றார்கள்.