தமிழ்மொழியுடன் என்றென்றும் இணைந்திருக்க பாலங்கள் அமைக்கும் இளையர்கள்

தமிழ்மொழியுடன் என்றென்றும் இணைந்திருக்க பாலங்கள் அமைக்கும் இளையர்கள்

3 mins read
456d9d9c-c247-4a2c-b12d-b2377a9c2156
-
multi-img1 of 5

கரு­ணா­நிதி துர்கா

சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­களில் தமிழ்­மொழி அடங்­கி­னா­லும் அதன் பயன்­பாட்­டில் சவால்­கள் ஏற்­ப­டவே செய்­கின்­றன. பள்­ளி­களில் தமிழ்­மொழியை இரண்­டாம் மொழி­யா­கக் கற்­று­வ­ரும் சூழல் இருந்­தா­லும் பள்­ளிப் பரு­வத்­திற்­குப் பின்­னர் தமி­ழோடு இணைந்­தி­ருக்­கும் வாய்ப்­பு­கள் குறை­யக்­கூ­டும்.

இத­னால் இங்­குள்ள இளை­யர்­கள், வெவ்­வேறு ஊட­கங்

­க­ளின் வழி­யாக தமிழ்­மொ­ழி­யு­டன் தொடர்ந்து இணைந்­தி­ருக்க முயன்று வரு­கின்­ற­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான சேவா மாணிக்­கம், 18, தமிழ்க் கவி­தை­களை இயற்­று­வ­தி­லும் வாசிப்­ப­தி­லும் அதிக நாட்­டம் கொண்­ட­வர்.

அவ­ரது வீட்­டில் உள்­ளோர் தமிழ்­மொ­ழி­யி­லேயே உரை­யா­டு­வர். அவ­ரு­டைய குடும்ப உறுப்­பி­னர்களும் கவி­தை­களில் அதிக ஈடு­பாடு உள்­ள­வர்­கள்.

இவ்­வாறு குடும்ப உறுப்­பி­னர்­கள் கொடுக்­கும் ஊக்­கத்­தால் 12 வய­தி­லி­ருந்து தமிழ்க் கவி­தை­கள் இயற்றி வரு­கி­றார் சேவா.

தமிழ்­மொழி தனது வாழ்­வா­தா­ரத்­திற்கு பிர­தா­ன­மாக அமை­யா­விட்­டா­லும் வாழ்­வுக்கு ஆதா­ர­மாக எப்­போ­தும் அமை­யும் என்கிறார் இவர். யாப்­பி­லக்­க­ணம், புதுக் கவி­தை­கள், சங்ககால கவி­தை­கள் போன்­ற­வற்­றைப் பற்றி மேலும் கற்­றுக்­கொள்ள விரும்­பு­கி­றார் சேவா.

இதே­போல் ஆர்­வத்­து­டன் கற்­ற­லில் ஈடு­பட்டு இசையமைப்புக் கற்றுக்கொண்ட செந்­தில்­கு­மார் ஹரீஸ்­வ­ரன், 18, தமிழ் திரை­யு­ல­கில் இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்ற லட்­சி­யத்­து­டன் இருக்­கி­றார்.

சிறு வய­தி­லி­ருந்து திரைப்

­ப­டங்­கள், பாடல்­கள் மீது அதிக நாட்­டம் கொண்­டுள்­ளார் இவர்.

பாடல்­க­ளுக்கு முது­கெ­லும்­பாக அமை­யும் அதன் வரி­க­ளை­யும்கூட ஹரீஸ்­வ­ரன் எழு­து

­வ­தில் என்பவர் ஈடு­பட்­டுள்­ளார்.

வாழ்க்­கை­யில் ஏற்­ப­டக்­கூடிய ஒவ்­வொரு சூழ­லை­யும் அதிலிருந்து கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வாழ்க்­கைப் பாடங்­க­ளை­யும் இவை எடுத்­து­ரைப்­ப­தால் இவற்­றைத் தன்­னோடு எளி­தில் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்ள முடி­கிறது என்­கி­றார் ஹரீஸ்­வ­ரன்.

இவ்­வா­றாக தன்­னையே அறிந்­திட உத­வும் இந்த ஊட­கங்­கள், தமிழ்­மொழி மீது தொடர்ந்து ஈடு­பாடு கொள்­ள­வும் மொழியை நேசிக்க வைக்­க­வும் உத­வு­வ­தாக இவர் கரு­து­கி­றார்.

இவ­ரைப்­போல் வாழ்க்­கையை மட்­டு­மல்­லா­மல் தனது கற்­பனை உல­கை­யும் மெரு­கூட்­டும் தமிழ் நாவல்­கள், கவி­தை­கள் வாசிப்­பதில் ஆர்­வம் கொண்­டுள்­ளார் ப.அ. ரகு­நந்­தன், 18.

'கவி­மாலை விதை­கள்' மாண­வ­ர­ணி­யின் துணைத்­த­லை­வ­ராக உள்ள இவர், தமிழ் நாவல்­கள் தனது கற்­பனை வளத்­தைத் தூண்­டு­வ­தா­கக் கூறு­கி­றார்.

உயர்­நி­லைப் பள்­ளி­யி­லும் தொடக்­கக் கல்­லூ­ரி­யி­லும் தமிழ் இலக்­க­ணப் பாடத்­தைப் பயின்­ற­தன் மூலம் தமிழ்­மொழி மீது இவர் கொண்ட ஆர்­வத்துக்கு மேலும் ஊக்கம் கிடைத்தது.

எதிர்­கா­லத்­தில் தமிழ் ஆசி­ரி­யர் பணி­யில் சேர­வேண்­டும் என்ற ரகு­நந்­த­னின் லட்­சி­யம், இவரை தமிழ்­மொ­ழி­யு­டன் தொடர்ந்து இணைந்­தி­ருக்­கச் செய்­கிறது.

தமிழ் மேடை நாட­கங்­கள் வழி தமி­ழின் அரு­மையை உணர்­வ­தா­கக் கூறு­கி­றார் பூஜா புண்­ணி­ய­மூர்த்தி, 24.

2021ல் தமிழ் மேடை நாடக உல­கில் காலடி எடுத்து வைத்த இவர், இது­வரை மூன்று படைப்­பு ­களில் ஈடு­பட்­டுள்­ளார்.

அவாண்ட் நாட­கக்­கு­ழு­வின் தயா­ரிப்­பு­க­ளான அபி­மன்யு, 4ஜி என்ற மேடை நாட­கங்­களில் நடித்­துள்­ளார் இவர்.

பேச்­சுத் தமி­ழில் மட்­டு­மின்றி செந்­த­மி­ழி­லும் பேசும் வாய்ப்பு இவ­ருக்கு கிடைத்­த­தால் தமிழ் மொழி­யி­லுள்ள நுணுக்­கங்­க­ளை­யும் முறை­யான உச்­ச­ரிப்­பு­களை­யும் துல்­லி­ய­மா­கக் கற்­றுக்­கொள்ள முடிந்­தது என்­றார் பூஜா.

எதிர்­கா­லத்­தில் மேடை நாட­கங்­களில் நடிப்­பதைக் கைவி­டா­மல் தமிழ்­மொ­ழி­யு­டன் தொடர்ந்து இணைந்­தி­ருக்க விரும்­பு­கி­றார் பூஜா.