பகுதி நேர, மூத்த ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவி

பகுதி நேர, மூத்த ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவி

1 mins read
d9114f1d-d179-40eb-a155-3cc55e835c8b
-

தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) பகுதி நேர ஊழி­யர்­கள், மூத்த ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரின் திறன் மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்­த­வி­ருக்­கிறது.

இவ்­விரு தரப்­பி­ன­ரும் தங்­கள் திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­குப் போதிய வாய்ப்­பு­களோ போதிய பாது­காப்போ இன்­றித் தவிப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளது. என்­டி­யுசி எதிர்­கொள்­ளும் புதிய சவால்­களில் இவை­யும் அடங்­கும் என்று அதன் உதவித் தலை­மைச் செய­லா­ளர் டெஸ்­மண்ட் சூ கூறி­னார்.

எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய இவ்­விரு பிரி­வி­ன­ருக்­கும் கூடு­தல் பாது­காப்பு தேவைப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

வட­கி­ழக்கு மாவட்ட மேய­ரு­மான திரு சூ, சிங்­கப்­பூர் கண்­ணோட்­டங்­கள் 2023 எனும் கருத்­த­ரங்­கில் இணை­யம்­வழி பங்­கேற்­றார்.

வேலை எனும் கருப்­பொ­ரு­ளில் கொள்கை ஆய்­வுக் கழ­கம் அக்­க­ருத்­த­ரங்­கிற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் முன்­னெப்­போ­தும் இல்­லாத வகை­யில் உல­கப் பொரு­ளி­ய­லில் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­திய நிலை­யில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் பாதிக்­கப்­பட்­டது. இத­னால் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பிரி­வில் உள்ள ஊழி­யர்­களைப் பாது­காக்க நேரிட்­டுள்­ளது என்­றார் திரு சூ.

குறை­வான கல்வி, குடும்ப விவ­கா­ரங்­கள், உடற்­குறை அல்­லது மன­நல பாதிப்பு உடை­யோர், வய­தா­னோர் போன்­றோ­ருக்கு திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி வழங்­கப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்தை அவர் எடுத்­து­ரைத்­தார். அர­சாங்­கத்­து­டன் இணைந்து என்டியுசி இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்றாரவர்.