சளிக்காய்ச்சல் மருந்துகள் போதுமான அளவில் உள்ளன

2 mins read
ecccd0a1-ebbb-454f-baa1-12152ad58ab2
-

சென்ற ஆண்டு இறுதிவாக்­கில், சளி, காய்ச்­சல், இரு­மல் போன்­ற­வற்­றுக்கு கடை­களில் கிடைக்­கும் சில வழக்­க­மான மருந்­து­க­ளுக்கு நில­விய தட்­டுப்­பாடு, தற்­போது குறைந்­துள்­ளது. அந்த மருந்து களுக்­கான தேவை மட்­டுப்­பட்­ட­தால், இருப்பு மேம்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­ துறை மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பல்­வகை கிரு­மித் தொற்­று­கள் அதி­க­மாக ஏற்­பட்­ட­தால், சில குறிப்­பிட்ட நிறு­வ­னங்­கள் உற்­பத்தி செய்­யும் சளி, காய்ச்­சல், இரு­மல் மருந்­து­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தது. அத­னால் சில இடங்­களில் தற்­கா­லிக­மாக பற்­றாக்­குறை நில­வி­ய­தாக டாக்­டர் ஜனில் குறிப்­பிட்­டார். ஆனால், உயிர்­வாயு மானி­கள், உயிர்­வாயு ஏற்­றக் கரு­வி­கள் உள்­ளிட்ட மருத்­து­வப் பொருள்­க­ளின் இருப்பு சிங்­கப்­பூ­ரில் தேவை­யைச் சமா­ளிக்­கும் அள­வுக்கு சென்ற ஆண்­டில் போது­மா­ன­தாக இருந்­தது.

மேலும், கொவிட்-19 கிருமி யுடன் வாழ­வும் மற்ற நோய் களைப் போலவே அதை­யும் மக்­கள் கரு­த­வும் பழ­கிக்கொள்­ளும்­போது, அவர்­கள் பயத்­தில் மருந்­து­களை வாங்­கிக் குவிக்­கும் சாத்­தி­யம் குறை­யும் என்று டாக்­டர் ஜனில் கூறி­னார்.

பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் சக்­தி­யாண்டி சுபாட், செங்­காங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் ஹி டிங் ரூ ஆகி­யோ­ரின் கேள்­வி­க­ளுக்கு டாக்­டர் ஜனில் நேற்று மன்­றத்­தில் பதில் அளித்­தார்.

நல்ல உடல்­நி­லை­யில் இருக்­கும் பெரும்­பா­லா­ன­வர்­கள் கொவிட்-19 தொற்­றும்­போது சளியை இல­கு­வாக்கி சுவா­சக் குழா­யி­லி­ருந்து வெளி­யேற்­றும் மருந்­து­க­ளைத் தொடர்ந்து உட்­கொள்­ளத் தேவை இருக்­காது என்று அவர் விவ­ரித்­தார்.

"பிர­பல நிறு­வ­னங்­க­ளின் மருந்­து­க­ளைத்­தான் வாங்க வேண்­டும் என்ற அவ­சி­யம் இல்லை. பொது­வான மருந்­து­கள் போது­மா­ன­தாக இருக்­கும்," என்று டாக்­டர் ஜனில் குறிப்­பிட்­டார்.