டெஸ்மண்ட் லீ: மேம்போக்கான, பகுத்தறிவு அற்ற வாதம்

டெஸ்மண்ட் லீ: மேம்போக்கான, பகுத்தறிவு அற்ற வாதம்

1 mins read
5977fd08-49ee-4859-8ed2-9cf56307e7d2
-

நிலத்­துக்­கான விலையை சேர்க்­காத வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளின் விலை­க­ளைத் தீர்­மா­னிக்க வேண்­டும் என்று தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் முன்­வைத்­துள்ள பரிந்­துரை, மேம்­போக்­காக நன்­றாய் இருப்­பது போல தெரி­ய­லாம் என்­றும் அது பொருத்­த­மற்ற வாதம் என்­றும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­யுள்­ளார்.

பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் (அல்­ஜு­னிட்) ஜெரால்ட் கியாம் எழுப்­பிய கேள்­விக்கு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் விடை­ய­ளித்­த­போது திரு லீ அவ்­வாறு சொன்­னார்.

"அது பகுத்­த­றி­வுக்­குப் பொருத்­த­மற்ற வாதம். நீண்ட கால­மாக நடப்­பில் உள்ள, ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட நில­ம­திப்­பீட்­டுக் கோட்­பா­டு­க­ளின் முன்னே அது செல்­லாது," என்ற அமைச்­சர், திரு லியோங்­கின் அணு­கு­முறை சிங்­கப்­பூ­ருக்கு ஆபத்­தா­னது என்­றார். கட்­டு­மா­னச் செலவு, ஒவ்­வொரு வட்­டா­ரத்­துக்­கான வேறு­பாடு ஆகி­யவை மட்­டும் வீவக வீட்டு விலை­யில் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று திரு லியோங் டிசம்­ப­ரில் கூறி­யி­ருந்­தார்.

"வரி விதிக்­காது, வரு­வாய் பெற வேறு வழி காணாது வீவக வீடு­க­ளைக் குறைந்த விலைக்கு அளிக்­க­லாம் என்று கூறு­வ­தன்­வழி நமது நாட்­டின் இருப்­பு­ நிதியை சூறை­யாட அவர் விரும்­பு­கி­றார்," என்­றார் திரு லீ.