ஐந்தாண்டுகளில் வீட்டுத் தீச்சம்பவங்கள் குறைந்தன

ஐந்தாண்டுகளில் வீட்டுத் தீச்சம்பவங்கள் குறைந்தன

1 mins read
0ec73355-6395-43c8-ab40-682f831bfbbf
-

சிங்­கப்­பூ­ரில் வீடு­களில் ஏற்­படும் தீச்­சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஐந்து ஆண்­டு­களில் குறைந்­துள்­ளது.

2018ஆம் ஆண்­டில் வீடுகளில் 1,235 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. சென்ற ஆண்டு புதி­வான எண்­ணிக்கை 934 ஆகும்.

அதே கால­கட்­டத்­தில் மின்­சா­ரம் தொடர்பான தீச்­சம்­ப­வங்­களின் எண்­ணிக்­கை­யில் அதிக மாற்­றம் இல்லை.

ஆண்­டு­தோ­றும் 250லிருந்து 300 வரையிலான அத்தகைய தீச்சம்பவங்கள் ஏற்பட்டு வந்­துள்­ளன.

சென்ற ஆண்டு மின்­சா­ரம் தொடர்­பான கார­ணங்­க­ளால் வீடு­களில் 257 தீச்­சம்­ப­வங்­கள் ஏற்பட்டதாக உள்­துறை துணை அமைச்­சர்  ஷ  தெரி­வித்­தார்.

புக்­கிட் பாஞ்­சாங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா, ஜாலான் புசார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டெனிஸ் புவா ஆகி­யோர் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு இணைப் பேரா­சி­ரி­யர் ஷ நாடா­ளு­மன்றத்தில் நேற்று பதி­ல் அளித்­தார்.

2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை, வீடு­களில் தீ மூண்­ட­தற்­கான முக்­கி­யக் கார­ணங்­களில் அதிக மாற்­றம் இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சமைக்­கும்­போது கவ­ன­மின்றி இருப்­பது, சிக­ரெட் உள்­ளிட்ட பற்­ற­வைக்­கப்­பட்ட பொருள்­களை சரி­யாக அணைக்­கா­மல் வீசி எறி­வது, கோளாறு உள்ள மின்­சா­ரக் கம்­பி­க­ளைக் கொண்ட பொருள் ­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது உள்­ளிட்­டவை கார­ணங்­களில் சில.

தீச்­சம்­ப­வங்­களுக்கு எதிரான பாது­காப்பு பற்றிய விழிப்­பு­ணர்வை குடி­யி­ருப்பாளர்களிடையே அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை எடுத்து வரு­வ­தா­க­வும் இணைப் பேரா­சி­ரி­யர் ஷ தெரி­வித்­தார்.