2,300 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை

2,300 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை

1 mins read
5f1bf4ae-2c8a-4802-ac0d-99605e959eae
படம்: பிக்ஸாபே -

சென்ற ஆண்டு மே மாத நில வரப்­படி, வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டத்­தின் மூலம் சுமார் 2,300 முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு வேலை வழங்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­துக்கு ­அ­ர­சாங்­கம் ஆத­ரவு தரும் அத்­திட்­டம் முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதைத் தொடர்ந்து அத்­த­கை­யோரை வேலைக்கு எடுக்க சிங்­கப்­பூ­ருக்­கான மஞ்­சள் நாடா இயக்­கத்­து­டன் இணைந்து பணி­யாற்ற நிறு­வ­னங்­க­ளி­டையே ஆர்­வம் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் டாக்­டர் டான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறினார்.

வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் வரும் மார்ச் மாதம் நிறுத்­தப்­படும்.

அதற்­குப் பிற­கும் முன்­னாள் குற்­ற­வா­ளி­களை வேலைக்கு எடுக்­கு­மாறு நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் வழி­களை அர­சாங்­கம் ஆலோ­சித்து வரு­வ­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­களை வேலைக்கு எடுக்­கு­மாறு நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கு­டன் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது. குறிப்பாக, மூத்த ஊழி­யர்­க­ளுக்கு வேலை கிடைக்­கச் செய்­வது இலக்கு.

2020 டிசம்­பர் மாதம் இத்­திட்­டம் முன்­னாள் குற்­ற­வாளி­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­பட்­டது.