ஹஜ் யாத்திரை: சிங்கப்பூருக்கு 900 இடங்கள்

ஹஜ் யாத்திரை: சிங்கப்பூருக்கு 900 இடங்கள்

1 mins read
88925f95-42f7-4e92-ad64-55bc62c9e3db
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­கான விண்­ணப்­பங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்டு மூன்று ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் ஹஜ்­ஜுக்கு செல்ல பிப்­ர­வ­ரி­யி­லி­ருந்து மீண்­டும் பதிந்­து­கொள்ள முடி­யும். ஹஜ் யாத்­தி­ரைக்­காக இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ருக்கு 900 இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. கொவிட்-19க்கு முன்­பி­ருந்த எண்­ணிக்­கைக்கு இது சம­மா­னது என்று சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

MyHajSG எனும் புதிய இணை­யத்­த­ளத்­தில் பிப்­ர­வரி 21ஆம் தேதி­யி­லிருந்து ஹஜ் யாத்­தி­ரைக்­கான முன்­ப­திவை முஸ்­லிம்­கள் செய்­ய­லாம் என்று முயிஸ் கூறி­யது.

ஹஜ்­ஜுக்கு செல்­வ­தன் தொடர்­பி­லான விண்­ணப்­பங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நடை­மு­றையை யாத்­தி­ரி­கர்­களுக்கு எளி­தாக்­கு­வதை MyHajSG தளம் இலக்­காக கொண்­டுள்­ளது என்று முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ருக்கு முத­லில் 407 இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால், இந்த எண்­ணிக்கை பிறகு 900ஆக உயர்த்­தப்­பட்­டது.