சிறுமி மானபங்கம்: அதிகாரிக்குச் சிறை

சிறுமி மானபங்கம்: அதிகாரிக்குச் சிறை

1 mins read
622875ed-b682-41fe-88f2-0406b85e7a7b
படம்: பிக்ஸாபே -

பதி­னொரு வய­துச் சிறு­மி­யைப் பின்­தொ­டர்ந்து, அவ­ளு­டைய வீட்­டிற்­குள் புகுந்து மான­பங்­கம் செய்த மனி­த­வள அமைச்­சின் குடி­யி­ருப்பு விவ­கார அதி­கா­ரி­யான 57 வயது லோ ஜின்­னுக்கு நேற்று ஓராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2020 அக்­டோ­பர் 19ஆம் தேதி, தோ பாயோ­வில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்­தில் சிறு­மி­யும் அவ­ளு­டைய எட்டு வயது தம்­பி­யும் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த­போது இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

குற்­றம் சாட்­டப்­பட்ட லோ, அவ்­வி­ரு­வ­ரை­யும் விளை­யாட்டு மைதா­னத்­தில் புகைப்­ப­டம் எடுத்து அன்று மாலை 5.30 மணி அள­வில் அவர்­களை பின்­தொ­டர்ந்­தார்.

அவ்­வி­ரு­வ­ரை­யும் மின்­தூக்­கி­யில் பின்­தொ­டர்ந்த லோ, அவர்­கள் வெளி­யே­றி­ய­போது தாமும் சேர்ந்து வெளி­யே­றி­னார். அவர்­க­ளு­டன் சேர்ந்து அவர்­களு­டைய வீட்­டிற்­குள் லோ நுழைந்­தார். அப்­போது அச்­சி­று­வர்­க­ளின் பெற்­றோர் வீட்­டில் இல்லை.

சட்­டென்று வீட்­டிற்­குள் நுழைந்த லோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, அன்­னி­யர்­களை வீட்­டிற்­குள் அனு­மதிக்­கக் கூடாது என்று பெற்­றோர் எச்­ச­ரித்­ததை நினை­வு­கூர்ந்து, அவரை உட­ன­டி­யாக வெளி­யே­றும்­படி கூறி­னார்.

தாம் எடுத்த புகைப்­ப­டத்தை சிறு­மி­யி­டம் காட்­டிய லோ, அவளை மான­பங்­கப்­ப­டுத்­தி­னார். சிறுமி அழத் தொடங்­கி­ய­வு­டன் லோ அந்த இடத்­தில் இ­ருந்து தப்­பிச் சென்­று­விட்­டார். இந்­தச் சம்­ப­வத்தை தொடர்ந்து, காவல்­து­றை­யி­டம் தமக்கு நேர்ந்த கொடு­மை­யைச் சிறுமி விவ­ரித்­தார். லோ 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர் என்­ப­தால் அவ­ருக்­குப் பிரம்­படி விதிக்க முடி­யாது.