செல்வாக்குமிக்க கடப்பிதழ்: சிங்கப்பூர் 2வது இடத்தில் நீடிப்பு

செல்வாக்குமிக்க கடப்பிதழ்: சிங்கப்பூர் 2வது இடத்தில் நீடிப்பு

2 mins read
38ff392d-ca27-4dab-81c8-4e5011c9eabd
-

உலக அள­வில் செல் வாக்கான கடப்­பி­தழ் வரி­சை­யில் சிங்­கப்­பூர் தொடர்ந்து இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. விசா இல்­லா­மல் 192 நாடுக­ளுக்­குள் நுழைய அனு­ம­திக்­கும் கடப்­பி­தழ் என்ற முறை­யில் இரண்­டா­வது இடத்தை தென்­கொ­ரி­யா­வு­டன் சிங்­கப்­பூர் பகிர்ந்­து­ கொள்­கிறது. ஜப்­பா­னிய கடப்­பி­தழ் முத­லி­டத்­தில் நீடிக்­கிறது. அந்த நாட்­டின் கடப்­பி­தழ் மூலம் 193 நாடுக­ளுக்­குள் விசா இன்றி நுழை­ய­மு­டி­யும்.

உல­கக் குடி­மக்­கள் மற்­றும் வசிப்­பி­டத்­திற்­கான ஆலோ­சனை நிறு­வ­ன­மான 'ஹென்லி அண்ட் பார்ட்­னர்ஸ்' தொகுத்­துள்ள உல­க­ளா­விய குறி­யீட்­டில் இந்த கடப்­பி­தழ் தர­வ­ரிசை இடம்­பெற்று உள்­ளது. 2021 அக்­டோ­ப­ரில் 192 நாடுக­ளுக்கு விசா எது­வு­மின்றி செல்ல வழி­வ­குக்­கக் கூடிய கடப்­பி­தழ் என்ற முறை­யில் சிங்­கப்­பூ­ரும் ஜப்­பா­னும் ஆக உய­ரிய இடத்­தைப் பகிர்ந்­து­கொண்டு இருந்­தன.

உலக நாடு­க­ளின் 199 கடப்

­பி­தழ்­க­ளை­யும் 227 நாடு­க­ளை­யும் ஒப்­பிட்டு ஹென்லி கடப்­பி­தழ் குறி­யீடு வகுக்­கப்­ப­டு­கிறது. அனைத்­து­லக விமா­னப் போக்­கு­ வ­ரத்து ஆணை­யத்­தின் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தக் கணக்­கீடு நடத்­தப்­ப­டு­கிறது.

உலக அள­வில் தலை­சி­றந்த கடப்­பி­தழ்­க­ளைக் கணக்­கி­டும் அதே­நே­ரம் தரம் தாழ்ந்த கடப்­

பி­தழ்­க­ளு­ம் வரி­சைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. குறி­யீட்­டின் கடைசி இடத்­தில் ஆஃப்கா­னிஸ்­தான் கடப்­பி­தழ் உள்­ளது. இந்த நாட்­டின் கடப்­பி­த­ழைக் கொண்டு 27 நாடுக­ளுக்கு மட்­டுமே விசா இன்றி செல்­ல­மு­டி­யும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்க்­குப் பிறகு ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் அதி­க­மான நாடு­கள் தங்­க­ளது எல்­லை­க­ளைத் திறந்­தி­ருக்­கும் வேளை­யில் ஆக அண்­மைய கடப்­பி­தழ் தர­வ­ரிசை வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

உல­க­ளா­விய பய­ணங்­கள் கொவிட்-19க்கு முந்­திய நிலை­யில் முக்­கால்­வா­சியை எட்டி உள்­ள­தாக 'ஹென்லி அண்ட் பார்­ட்னர்ஸ்' நிறு­வ­னம் தெரி­வித்துள்­ளது.

கிட்­டத்­தட்ட மூன்­றாண்டு காலம் நடப்­பில் இருந்த கடு­மை­யான பய­ணக் கட்­டுப்­பா­டு­களை சீனா கடந்த ஞாயி­றன்று தளர்த்­தி­யது. சீனா­வுக்­குள் நுழை­யும் பய­ணி­க­ளுக்­கான தனி­மை­யுத்­த­ரவை அது ரத்து செய்­து­விட்­டது. சீனா­வில் இறங்­கு­வ­தற்கு 48 மணி நேரத்­திற்கு முன்­ன­தாக எடுக்­கப்­பட்ட கொவிட்-19 கிரு­மிக்­கான பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் தொற்­றில்லை என்று இருந்­தால் மட்­டும் போது­மா­னது; உலக மக்­கள் தாரா­ள­மாக தங்­க­ளது நாட்­டுக்­குள் நுழை­ய­லாம் என்று சீனா அறி­வித்து அதனை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது.

இதற்கு முன்­னர், சீனா செல்­வோர் முதல் ஐந்து நாள்­கள் ஹோட்­ட­லிலோ பிற தங்­கு­மி­டத்­திலோ தனி­மை­யில் இருக்­க­வேண்­டும்; அடுத்த மூன்று நாள்­கள் வீட்­டில் தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்ற உத்­த­ரவு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தது.

கட்­டுப்­பா­டு­கள் எளி­மை­யாக்­கப்­பட்­ட­தன் விளை­வாக அடுத்த மூன்று மாதங்­களில் சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் குறைந்­த­பட்­சம் நான்கு வர்த்­த­கச் சந்­திப்­புக் கூட்­டங்­கள் நிகழ உள்­ளன.