வெப்பத்தை உணரக்கூடிய சிறப்பு சீருடைக்கான யோசனை

வெப்பத்தை உணரக்கூடிய சிறப்பு சீருடைக்கான யோசனை

1 mins read
41f41fd3-1185-428e-85c1-5f1116f4ea3c
-

வெப்­ப­நிலை அதி­க­ரித்து வரும் நிலை­யில் வருங்­கால தலை­மு­றை­யைச் சேர்ந்த சிங்­கப்­பூர் ஆயு­தப் படை வீரர்­கள் விவேக சீரு­டை­யைப் பெற வாய்ப்­புள்­ளது. அதிக வெப்­பத்தை முன்­கூட்­டியே உணர்ந்து, கண்­கா­ணிக்­கும் வகை­யில் சீருடை அமைந்­தி­ருக்­கும். அதற்­கான உணர்­க­ருவி அந்த சீரு­டை­யு­டன் இணைக்­கப்­பட்டு இருக்­கும்.

வீரர்­கள் எந்த அள­வி­லான வெப்­ப­நி­லை­யில் உள்­ள­னர் என்­பதை அவர்­க­ளின் தள­ப­தி­கள் கண்­கா­ணித்து ஆபத்­தில் சிக்­கக்­கூ­டி­ய­வர்­களை விரைந்து அடை­யா­ளம் காண இந்த வசதி கைகொ­டுக்­கும். புதி­தா­கத் திறக்­கப்­பட்­டுள்ள வெப்­பத்­த­டுப்பு மீள்­தி­றன் மற்­றும் செயல்­பாட்டு மையத்­தின் யோச­னை­க­ளுள் இந்த சீரு­டை­யும் ஒன்று.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யில் நேற்று இந்த மையம் திறக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், டிஎஸ்ஓ தேசிய சோத­னைக்­கூ­டம் ஆகி­ய­வற்­றின் கூட்­டு­மு­யற்­சி­யில் இம்­மை­யம் உரு­வாகி உள்­ளது.