சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஹியுண்டாய் கார்கள் அறிமுகம்

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஹியுண்டாய் கார்கள் அறிமுகம்

2 mins read
d61ffc94-11a4-4764-9ca0-bfaa5a13dedc
-

தென்­கொ­ரி­யா­வின் வாக­னத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஹியுண்­டா­யின் சிங்­கப்­பூர் பிரிவு இங்­குள்ள வாகன ஒன்­று­சேர்ப்­புத் தொழிற்­சா­லை­யில் இருந்து 'ஐயோ­னிக் 5' என்­னும் மின்­சார காரை இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் அறி­மு­கம் செய்ய உள்­ளது.

அறி­மு­கம் செய்ய உள்ள முதல் 100 கார்­க­ளுக்­கான பதிவு­எண்ணுக்கான அறப்­பணி ஏலத்தை ஹியுண்­டாய் சிங்­கப்­பூர் நடத்த உள்­ளது. இந்த 100 கார்­

க­ளும் தென்­கொ­ரி­யா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட பாகங்­கள் இங்­குள்ள தொழிற்­சா­லை­யில் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு உரு­வாக்­கப்­பட்­டவை.

'EVS' என்­னும் முன்­னெ­ழுத்­துக்­க­ளு­டன் கூடிய சிறப்­புப் பதி­வெண்ணை இந்த கார்­கள் கொண்­டி­ருக்­கும். சிங்­கப்­பூ­ரில் உரு­வாக்­கப்­பட்ட மின்­சார வாக­னம் என்பதை இந்த எழுத்துகள் குறிக்­கும்.

பதி­வெண் ஏலத்­தின் மூலம் அறப்­ப­ணி­க­ளுக்­காக $400,000 தொகை­யைத் திரட்­ட­மு­டி­யும் என்று இந்த நிறு­வ­னம் நம்­பு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் முதல் வாகன பாகங்­கள் ஒன்­று­சேர்ப்பு தொழிற்­சா­லைக்­கான தள­மாக 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக விளங்­கி

­வ­ரும் ஜூரோங்­கில் ஹியுண்­டாய் மோட்­டார் குழு புத்­தாக்க மையம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­தப் பணி­கள் ஏப்­ரல் மாதம் நிறை­வு­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஹியுண்­டாய் மோட்­டார் நிறு­வ­னத்­தின் புத்­தாக்க விற்­ப­னைக் குழு­மத் தலை­வர் ஏன்டி காங் தெரி­வித்­தார்.

முன்­னர் திட்­ட­மிட்­ட­படி பணி­கள் கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தி­லேயே நிறை­வு­பெற்­றி­ருக்க வேண்­டும். கொவிட்-19 சூழ­லால் பணி­கள் தாம­த­ம­டைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முழு­மை­யாக வர்­ணம் பூசப்­பட்ட காரின் உருவ பாகத்தை இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்­தும் இதர பாகங்­களை தென்­கொ­ரி­யா­வில் இருந்­தும் இங்­குள்ள தொழிற்­சாலை இறக்­கு­மதி செய்­யும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் திரு காங் தெரி­வித்­தார்.

தயா­ரிப்பு எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தும் தானி­யக்­கத்­திற்­கான பாகங்­களை சிங்­கப்­பூ­ரிலிருந்து பெற ஹியுண்­டாய் முயற்சி எடுக்­கும் என்றார் அவர். 2025ஆம் ஆண்­டு­வாக்­கில் ஆண்டு ஒன்­றுக்கு 30,000 வாக­னங்­க­ளைத் தயா­ரிக்க இத்­தொ­ழிற்­சாலை திட்­ட­மிட்டுள்­ளது. அறி­மு­கம் செய்­யப்­பட இருக்­கும் 'ஐயோ­னிக் 5' கார்­

க­ளைத் தவிர்த்து 'ஐயோ­னிக் 6' மற்­றும் புத்­தம்­பு­திய 'கோனா' மின்­சார கார்­க­ளை­யும் உரு­வாக்க­ ஜூரோங் தொழிற்­சாலை எண்­ணம் கொண்­டுள்­ளது.