சிங்கப்பூர் கலை வாரத்தை முன்னிட்டு தீவு முழுவதும் உள்ள கலைக் கூடங்களில் சிறந்த கலைஞர்களின் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கில்மன் பாரக்ஸ் காட்சிக் கூடத்தில் இயோ வொர்க்ஷாப் நிறுவிய ஆட்ரி இயோ, தங்களுடைய நட்சத்திரக் கலைஞர்களின் படைப்புகளை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். சிங்கப்பூர் கலை வாரத்தில் மொத்தம் 180க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் கண்காட்சிகளில் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் காண்பது அரிது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த 50 வயது இல்லத்தரசியான அவர், செவ்வாய்க்கிழமை வரை ஒன்பது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்குச் சென்றுள்ளார்.
உணவுக் கட்டமைப்பில் கலையும் கலாசாரமும் பின்னிப் பிணைந்த அமோய் ஸ்திரீட் 'டேபிள் மானர்ஸ் அட் அப்படைட்' எனும் நிகழ்வு அவரை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள கலைக் காட்சிகள் வியப்பாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
தங்ளின் ரோட்டில் உள்ள தங்ளின் கடைத் தொகுதியில் இரண்டு கண்காட்சிகள் நடைபெறுகின்றன. மிட் ஜாய் என் கைவண்ணத்தில் தாள்களில் உருவாக்கப்பட்ட 32 சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
எண் 51 ஜாலான் பெமிம்பின்னில் உள்ள காமா ஸ்பேஸ், செயின்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் தேசிய கலைக் கூடத்தின் வூ குவான்ஷோங் காட்சிக்கூடம், எண் 47 மாலன் ரோட்டில் உள்ள கில்மன் பாரக்ஸ், எண் 9 லாக் ரோடு, கில்மேன் பாரக்ஸ், எண் 22 லாக் ரோடு கில்மன் பாரக்ஸ், எண் 61 அலிவால் ஸ்திரீட்டில் உள்ள கலையரங்கம், 39 கெப்பல் ரோட்டில் உள்ள காஜா கலைக் கூடம் ஆகிய இடங்களில் கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

