கத்தியைக் காட்டி மாதிடம் கொள்ளை முயற்சி

கத்தியைக் காட்டி மாதிடம் கொள்ளை முயற்சி

2 mins read
2b3dfffd-bbb6-47cd-adbe-f6513d3648b8
-

தோ பாயோ­வில் உள்ள 'எச்­டிபி ஹப்' கார் நிறுத்­து­மி­டத்­தில் கத்­தி­யைக் கொண்டு 48 வயது மாதி­ட­மி­ருந்து பணத்­தைக் கொள்­ளை­ய­டிக்க முற்­பட்ட ஆட­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

போய் யான் கிட், 57, காணொளி இணைப்பு வாயி­லாக காலை 10.30 மணி­ய­ள­வில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­றுத்­தப்­பட்­டார்.

இது­போன்ற மற்ற குற்­றங்­க­ளி­லும் போய் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. விசா­ர­ணைக்கு உதவ ஒரு­வா­ரத்­திற்கு மத்­திய காவல் பிரி­வில் அவ­ரைத் தடுத்­து­வைக்­கு­மாறு காவல்துறை கேட்­டுக்­கொண்­டது.

கார் நிறுத்­து­மி­டத்­தில் பின்­பக்­க­மாக அந்த மாதை போய் அணு­கி­னார். அந்த நேரத்­தில் அந்த மாது அவ­ரது வாக­னத்­திற்­குப் பக்­கத்­தில் நின்­றார். காருக்­குள் ஏறு­மாறு போய் அந்த மாதி­டம் கூறி­னார்.

இரு­வ­ருக்­கும் இடையே ஏற்­பட்ட மோத­லில் கத்­தி­யைக் கொண்டு அந்த மாதை போய் தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இச்­சம்­ப­வத்­தில் அந்த மாது பணத்தை இழக்­க­வில்லை. அவ­ரது வலக்­கை­யில் வெட்­டுக்­ காயம் ஏற்­பட்­டது. அவ­ரது வயிற்­றில் கீறல்­களும் அவ­ரது மேற்­கை­யில் சிராய்ப்­புக் காயங்­களும் ஏற்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அவர் சுய­நி­னை­வு­டன் இருந்­தார். தற்­போது அவ­ரது உடல்­நிலை சீராக உள்­ளது.

காவல்­து­றை­யி­டம் புகார் அளிக்­கப்­பட்ட 24 மணி நேரத்­திற்­குள் தங்­ளின் காவல்­துறை பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் அந்த ஆட­வரை அடை­யா­ளம் கண்டு அவ­ரைக் கைது செய்­த­தாக காவல்­துறை கூறி­யது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­தைத் தொடர்ந்து, தம்மை மன­ந­லக் கழ­கத்­திற்­குக் கொண்டு செல்­லு­மாறு போய் கேட்­டுக்­கொண்­டார். போயின் மன­ந­லம் பற்றி விசா­ரணை அதி­காரி கவ­னத்­து­டன் இருப்­பார் என்று மாவட்ட நீதி­பதி டெரன்ஸ் டே கூறி­னார்.

கொள்­ளை­ய­டித்து அல்­லது கொள்­ளை­ய­டிக்க முற்­பட்டு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­த­தற்­காக குற்­ற­வா­ளிக்கு ஐந்து முதல் 20 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.