செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
612e98c2-3f30-48f3-9715-c061b1185e82
-

காலணிக் கடை நிர்வாகிக்கு

30,000 வெள்ளி அபராதம்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்படும் காலணி குறித்த ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 10,000 வெள்ளி லஞ்சம் வாங்கிய காலணிக் கடை உதவி மேலாளர் ஒருவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும் 30,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜுவல் சாங்கியில் உள்ள ஃபுட் லாக்கர் கடையில் வேலை பார்த்தபோது சேவியர் கோ யிஸிகுவான் இந்தக் குற்றச் செயலைப் புரிந்துள்ளார்.

தற்போது 31 வயதாகும் சிங்கப்பூரரான அவர் 2021 ஜனவரி 29ஆம் தேதி வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர், தான் பெற்ற லஞ்சப் பணத்தை தாமாகவே முன்வந்து ஒப்படைத்தார்.

துர்நாற்றம் புகார்; பிணமாக மாது

துர்நாற்றம் வீசியதாக குடியிருப்பாளர் ஒருவர் புகார் அளித்ததால் அல்ஜுனிட் கிரசென்ட் புளோக் 100ல் உள்ள ஓரறை வீட்டை காவல்துறையினர் சோதனை யிட்டதில் 69 வயது மாது ஒருவர் அசைவற்றுக் கிடந்தார். அவரைப் பரிசோதித்த அதிகாரிகள் மாது இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இம்மாதம் 8ஆம் தேதி நடந்த சம்பவத்தில் சூது இருக்காது என காவல்துறையினர் நம்புகின்றனர். மாது தனிமையில் வசித்தார் எனத் தாம் நம்புவதாக மெக்பர்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெங் லிங் கூறி உள்ளார். "என்னுடைய அடித்தள தொண்டூழியர் களுக்கு அவரைத் தெரியும். வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட உதவிகளை தொண்டூழியர்கள் அவருக்குச் செய்துள்ளனர்," என்றார் அவர்.

அல்ஜுனிட் கிரசென்ட் புளோக் 100ல் 12 மாடிகளில் மொத்தம் 198 ஓரறை வாடகை வீடுகள் அங்கு உள்ளன. வீட்டில் தனிமையில் இருக்கும் முதியோர் இறக்கும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிப்பதாக டின் பெய் லிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு ஓட்டுநர்களுக்கு

அபராதம், தகுதியிழப்பு

முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் அதிவேகமாக காரை ஓட்டிய மேலும் இருவருக்கு அபராதம் விதிக்கப் பட்டு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022 நவம்பரில் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் ஷான் சூங் ஷி ஹோங், 38, டேரில் ஆங் சி ஹாவோ ஆகியோரும் அடங்குவர். மீண்டும் குற்றம் புரிந்த சூங்குக்கு $5,000 அபராதமும் அனைத்துவித மான வாகனங்களை ஓட்ட 18 மாதங்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டது. சம்பவத்தன்று மஞ்சள் நிற பிஎம்டபிள்யூ காரை அவர் மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினார்.