வீட்டு விலை அதிகரிப்பு மிதமடைந்தது

வீட்டு விலை அதிகரிப்பு மிதமடைந்தது

1 mins read
3cde67a2-8946-44fc-bed3-491192749b94
-

வீட்டு விலை­யேற்­றத்­தைத் தணிக்­கும் நடை­மு­றை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, தனி­யார், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை அதி­க­ரிப்பு கடந்த ஆண்­டின் நான்­கா­வது காலாண்­டில் மிதமடைந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­துள்­ளார்.

மேலும் பல வீவக, தனி­யார் வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­

ப­டு­வதை இனி எதிர்­பார்க்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யம், சிங்­கப்­பூர் சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கம் ஆகி­ய­வற்றின் ஏற்பாட்டில் கிராண்ட் கோப்தார்ன் வாட்­டர்­ஃபி­ரண்ட் ஹோட்­ட­லில் நேற்று நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் திரு லீ உரை­யாற்­றி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது சிங்­கப்­பூ­ரின் சொத்­துச் சந்தை நிலைகுலையாமல் வலு­வாக இருந்­த­தை அவர் சுட்டினார்.