கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள சீன நாட்டவர்கள் பலர் சிங்கப்பூரில் உள்ள மருந்தகங்
களுக்குச் செல்கின்றனர்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டு களுக்குப் பிறகு, சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான பயணம் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இருவகை திறன்கொண்ட மொடர்னா தடுப்பூசி சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டதி
லிருந்து அதைப் போட்டுக்கொள்ள கடந்த ஆண்டு இறுதி யில் மருந்தகங்களுக்கு வந்த சீன நாட்டவர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பத்து விழுக்காடு ஏற்றம் கண்டதாக ராஃபிள்ஸ் மெடிக்கல் தெரிவித்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும், அதுதொடர்பாக விவரங்
களைப் பெறும் சீன நாட்டவர்
களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் பார்க்வே ஷென்டன் கூறியது.

