கூடுதல் ஆற்றல், ஹைட்ரஜனுக்கு இணக்கமான புதிய இயற்கை எரிவாயு ஆலைகள்

கூடுதல் ஆற்றல், ஹைட்ரஜனுக்கு இணக்கமான புதிய இயற்கை எரிவாயு ஆலைகள்

1 mins read
e5f68cff-f7e2-4947-a391-2ada8bf24b96
-

இவ்­வாண்டு முதல் அனைத்­துப் புதிய இயற்கை எரி­வாயு ஆலை­கள் ஏறத்­தாழ 10 விழுக்­காடு கூடு­த­லான ஆற்­ற­லை­யும் ஹைட்­ர­ஜ­னுக்கு இணக்­க­மா­ன­தா­க­வும் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­

பட்டுள்ளது.

95 விழுக்­காடு இயற்கை எரி­வா­யுவை இத்­துறை நம்­பி­யி­ருக்­கிறது. தற்­போது 40 விழுக்­காடு கரிம வெளி­யேற்­றத்­துக்கு மின்­சா­ரத்­துறை கார­ண­மாக இருக்­கிறது. எனவே, புதிய அணு­கு­முறை மின்­சா­ரத்­து­றை­யின் கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைத்து கரிம வெளி­யேற்­றம் அறவே இல்­லாத நிலையை எட்ட உத­வும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

2050ஆம் ஆண்­டுக்­குள் கரிம வெளி­யேற்­றம் அறவே இல்­லாத நிலையை அடை­வதே இலக்கு.

சிங்­கப்­பூ­ரின் மின்­சா­ரத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய முக்­கி­ய­மான புதிய, வலுப்­ப­டுத்­தப்­பட்ட ஆலை­களில் கரிம வெளி­யேற்ற வரம்பு விதிக்­கப்­படும் என்று எரி­சக்தி சந்தை ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இதன்­மூ­லம் கரிம வெளி­யேற்­றம் குறை­வ­தோடு நம்­ப­க­மான, தடை­யற்ற மின்­சா­ரம் தொடர்ந்து கிடைக்­கும் என்று ஆணை­யத்­தின் கொள்கை, திட்­ட­மி­டல் இயக்­கு­நர் திரு லாவ் கீ யோங் கூறி­னார்.

புதிய, வலுப்­ப­டுத்­தப்­பட்ட ஆலை­கள் குறைந்­தது ஹைட்­ர­ஜ­னு­டன் குறைந்­தது 30 விழுக்­காடு இணக்­க­மா­ன­வை­யாக இருக்க வேண்­டும். எதிர்­கா­லத்­தில் இது 100 விழுக்­கா­டாக உயர வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தர­நி­லை­யைக் கடு­மை­யாக்­கு­வ­தற்கு முன்பு சம்­பந்­தப்­பட்ட தொழில்­து­றை­யு­டன் ஆணை­யம் ஆலோ­சனை நடத்­தும்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது கூடு­தல் ஆற்­றல் உள்ள ஆலை­கள் இருப்­ப­தால் கரிம வெளி­யேற்­றம் குறைந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. 2021ஆம் ஆண்­டில் கரிம வெளி­யேற்­றம் ஏறத்­தாழ 14 விழுக்­காடு குறைந்­த­தாக ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளம் மூலம் பெறப்­பட்ட தர­வு­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.