தடைகளைத் தகர்த்தெறிந்து இலக்கை எட்டிய மாணவர்

தடைகளைத் தகர்த்தெறிந்து இலக்கை எட்டிய மாணவர்

2 mins read
49222f49-cb07-413b-a324-a8677f1d418c
-

ஆ. விஷ்ணு வர்­தினி

அனு­தி­ன­மும் ஜோகூர் பாருவில் உள்ள தனது இல்­லத்­தி­லி­ருந்து நார்த்­பு­ரூக்ஸ் உயர்­நி­லைப் பள்­ளிக்­குப் பய­ணம் செய்து வந்­தார் மாண­வர் நமர் சிங் மன். ஆனால், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் மலே­சி­யா­வி­லேயே முடங்க வேண்­டிய கட்­டா­யம் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

அந்­தச் சூழல் சில வாரங்­கள் மட்­டுமே நீடிக்­கும் என அவர் எதிர்­பார்த்­தார். ஆனால் 2020லிருந்து 2021 வரை ஓராண்­டுக்­கும் மேலாக அவ­ரால் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யா­மல் போனது.

அச்­ச­ம­யத்­தில், இணை­ய­வழி பாடங்­களே நம­ருக்கு கைகொ­டுத்து வந்­தன. இத்­த­கைய தடைகளைத் தாண்டி, நேற்று 'ஓ' நிலை தேர்­வில் தாம் எதிர்­பார்த்த இலக்கை எட்டி தேர்ச்சி பெற்று மன­நி­றை­வு­டன் இருக்­கி­றார் நமர்.

"நேர­டி­யாக வகுப்­பு­களில் பங்கு­பெற முடி­யா­த­தால் வருத்­தம் அடை­யவே செய்­தேன். ஆனால், எனது வகுப்பு ஆசி­ரி­யர்­களும் பள்ளி நிர்­வா­க­மும் எனது கல்வி தடைப­டா­மல் இருக்க பெரி­தும் உத­வி­னர். நான் ஸூம் தளம் வழி பாடங்­

க­ளைக் கற்க அவர்­கள் ஏற்­பாடு செய்­த­னர்," என்­றார் 16 வயது நமர். இணை­ய­வழி கற்­ற­லி­னால், ஆய்­வுக்­கூ­டப் பாடங்­க­ளி­லும், செயல்­முறை சார்ந்த பாடங்­க­ளி­லும் நம­ரால் முழு­வதுமாக ஈடு­பட முடி­ய­வில்லை. ஆனால், பாடங்­களில் தனக்கு ஏற்பட்ட சந்­தே­கங்­க­ளைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்­குப் பள்ளி வேளைக்­குப் பின்­ன­ரும் தனது ஆசி­ரி­யர்­கள் தன்னை இணை­யம் வாயி­லா­கச் சந்­தித்­தது கைகொ­டுத்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

2021ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் திரும்­பி­ய­போது, தின­மும் தாயார், இரு சகோ­த­ரி­க­ளு­டன் காலை 4 மணி­ய­ள­வில் எழுந்து, 5.30 மணி­ய­ள­வில் ரயி­லில் ஏறி சிங்­கப்­பூ­ருக்கு வரு­வதை நமர் வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார். பின்­னர் மாலை 6 மணி­ய­ள­வில், பள்ளி முடிந்து, பேருந்­தில் ஜோகூ­ருக்­குத் திரும்­பி­னார்.

இருப்­பி­னும், களைப்­பைப் பொருட்­ப­டுத்­தா­மல், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் கணக்­கி­யல் பாடம் பயி­லும் அவ­ரது கனவு நன­வாக்­கி­யுள்­ள­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார் நமர். இவ்­வாண்டு, நீ ஆன் அல்­லது சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அவர் கணக்­கி­யல் பாடம் பயில்­வார். நம­ரு­டன், நேற்று 'ஓ' நிலை எனப்­படும் பொதுக் கல்­விச் சான்­றி­தழ் சாதா­ரண நிலைத் தேர்வு முடி­வு­களை மொத்­தம் 23,684 மாண­வர்­கள் பெற்­றுக்­கொண்­ட­னர். 86.2 விழுக்­காட்டு மாண­வர்­கள் ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்ட பாடங்­களில் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர். முந்­தைய ஆண்டை காட்­டி­லும் இது 0.6 விழுக்­காடு அதி­கம்.

கடந்த ஆண்டைப் போலவே பெரும்­பா­லான மாண­வர்­கள் குறைந்­த­பட்­சம் ஒரு பாடத்­தில் தேர்ச்சி பெற்றுள்­ள­னர்.

99.8 விழுக்­காட்­டி­னர் ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட பாடங்­க­ளி­லும் 96.6 விழுக்­காட்­டி­னர் மூன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட பாடங்­க­ளி­லும் தேர்ச்சி அடைந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­கம் கூறியது.