பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்

2 mins read
a1f18f72-9a9b-4788-aa54-0fdecb61f9cf
-

குறைந்த, நடுத்­தர வரு­வாய்க் குடும்­பங்­க­ளுக்கு பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­டண உயர்­வைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தகு­தி­பெ­றும் குடும்­பங்­கள் இம்­மா­தம் 16ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 31ஆம் தேதி வரை இதற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

தகு­தி­பெ­று­வோர், https://www.go.gov.sg/ptv என்ற இணை­யத்­தள முக­வ­ரி­யிலோ அவ­ர­வர் வசிக்­கும் வட்­டா­ரத்­தின் சமூக மன்­றங்­க­ளிலோ விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பிக்­க­லாம்.

போக்­கு­வ­ரத்து அமைச்­சும் மக்­கள் கழ­க­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

ஏற்­கெ­னவே முதல்­கட்­ட­மாக விநி­யோ­கிக்­கப்­பட்ட இப்­பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­ற­வர்­கள் மறு­முறை விண்­ணப்­பிக்­கக்­கூ­டாது.

விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் அது­கு­றித்து அஞ்­சல்­வழி தெரி­விக்­கப்­படும்.

சென்ற மாதத்­தி­லி­ருந்து பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணங்­கள் 2.9 விழுக்­காடு உயர்ந்­துள்­ளன.

அதைச் சமா­ளிக்க உத­வும் நோக்­கில் $30 மதிப்­புள்ள மொத்­தம் 600,000 பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

முதல்­கட்­ட­மாக, இப்­பற்­றுச்­சீட்டு­களில் ஒரு பகுதி, ஏற்­கெனவே 2021ஆம் ஆண்டு பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளா­க­வும் தொடர்ந்து பற்­றுச்­சீட்­டுக்­குத் தகு­தி­பெற்­ற­வர்­க­ளா­க­வும் இருப்­போ­ருக்கு வழங்­கப்­பட்டுள்ளன.

முதல் கட்ட விநியோ­கம் சென்ற மாதம் முடி­வுற்றது. அதில் மொத்­தம் 240,000 இல்­லங்­களுக்கு பொதுப் போக்குவரத்துப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டன.

இது­கு­றித்து அவர்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

கடி­தத்­தில் காணப்­படும் வழி­மு­றை­களைப் பின்­பற்றி டிரான்­சிட்­லிங்க் முகப்­பு­க­ளிலோ டிரான்­சிட்­லிங்க் பய­ணச்­சீட்டு வழங்­கும் அலு­வ­ல­கங்­க­ளிலோ சலு­கைக் கட்­டண அட்டை வழங்­கும் அலு­வ­ல­கங்­களிலோ பற்­றுச்­சீட்­டு­களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அனைத்­துப் பற்­றுச்­சீட்­டு­களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்­குள் மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.

இது­கு­றித்து சந்­தே­கங்­க­ள் ஏதுமிருந்தால், குடி­யி­ருப்­பா­ளர்­கள் அவ­ர­வர் பகு­தி­யில் உள்ள சமூக மன்­றங்­களை அணு­கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.