$200,000 முதலீட்டு மோசடி; மறுமுறை குற்றம் செய்த ஆடவருக்கு மூன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை

$200,000 முதலீட்டு மோசடி; மறுமுறை குற்றம் செய்த ஆடவருக்கு மூன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை

1 mins read
6318b029-593d-4dbc-9826-c8d16eed3238
படம்: பிக்ஸாபே -

முக­மது பர்­ஹான் ஸமாலி எனும் 34 வயது ஆட­வ­ருக்கு $200,000க்கு மேற்­பட்ட முத­லீட்டு மோசடி தொடர்­பில் நேற்று மூன்­றரை ஆண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.ந் கடந்த 2020, 2021ஆம் ஆண்­டு­களில் மூன்று பேரை ஏமாற்­றி­யது தொடர்­பான நான்கு குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இதே­போன்ற குற்­றச்­செ­ய­லுக்­காக 16 மாதச் சிறைத்­தண்­ட­னையை நிறை­வேற்றி வெளி­வந்த சிறிது காலத்­தில் இவர் இவ்­வாறு மோச­டி­யில் ஈடு­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

சிறை­யி­லி­ருந்து வெளி­வந்த பிறகு நண்­பர்­கள், குடும்­பத்­தி­ன­ரி­டம் கடன் வாங்கி மின்­வர்த்­தக நிறு­வ­னத்­தைத் தொடங்­கிய ஃபர்­ஹா­னுக்கு இழப்பு ஏற்­ப­டவே போலி­யான முத­லீட்­டுத் திட்­டத்தை முன்­வைத்து பழைய நண்­பர், அவ­ரது மேற்­பார்­வை­யா­ளர், ஓய்­வு­பெற்ற ஊழி­யர் ஒரு­வர் ஆகி­யோரை ஏமாற்­றி­னார்.

உறுதியளித்தபடி பணம் கிடைக்காததால் ஓய்வுபெற்ற ஊழியர் காவல்துறையிடம் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.