செழிப்பு பொங்கட்டும்; பிரதமரின் பொங்கலோ பொங்கல் வாழ்த்து

செழிப்பு பொங்கட்டும்; பிரதமரின் பொங்கலோ பொங்கல் வாழ்த்து

1 mins read
72a7143d-97b5-4285-bb4c-50cea3d3e931
-

பிர­த­மர் லீ சியன் லூங் பொங்­கலோ பொங்­கல் என்று பொங்­கல் வாழ்த்து தெரி­வித்து இருக்­கி­றார்.

இன்று முதல் அடுத்த நான்கு நாள்­க­ளுக்­குப் பொங்கல் விழாவை தமி­ழர்­கள் பல­ரும் சிறப்­பா­கக் கொண்­டா­டு­கி­றார்­கள்.

இந்­தப் பாரம்­ப­ரிய அறு­வடைத் திரு­விழா தமிழ்­நாட்­டில் தொடங்­கி­யது. அறு­வடை செழிக்க உதவும் சூரிய பக­வா­னுக்­கும் விவ­சா­யி­க­ளுக்­குப் பெரி­தும் உதவும் கால்­ந­டை­க­ளுக்­கும் நன்றி கூறும் வகை­யில் பொங்கல் பண்டிகை கொண்­டா­டப்படு­கி­றது.

சிங்­கப்­பூ­ரில் இந்த வார முடி­வில் இந்­திய மர­பு­டைமை நிலை­யம் பொங்­கல் பொது வர­வேற்பு நிகழ்ச்­சியை நடத்­து­கிறது. பொங்­கல் பண்­டி­கைக்கு வேளாண்மை அடிப்­படை என்­பதை அந்த நிகழ்ச்சி எடுத்­துக்­காட்­டும்.

பொங்­கல் பற்றி தெரிந்­து­கொள்ள ஏரா­ள­மான தக­வல்­கள் அங்கு இருக்­கும். https://www.indianheritage.gov.sg/pongalo-pongal/index.html என்ற முக­வ­ரி­யில் மேலும் பல விவ­ரங்­க­ளைப் பெற­லாம் என்று ஃபேஸ்புக்­கில் பிர­த­மர் தெரி­வித்து இருக்­கிறார்.

இந்­தப் பண்­டி­கைக் காலத்­தில் செழிப்­பும், மங்­க­ல­மும் அப­ரி­மி­த­மா­கப் பொங்­கி வழியட்டும் என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ள பிரதமர், இந்­திய பாரம்­பரிய நிலைய பொது வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்ற கலை­நிகழ்ச்­சி­யைக் காட்­டும் படத்­தை­யும் வெளி­யிட்­டுள்­ளார்.