கல்வி அமைச்சின் 'இஜைரோ' சேவை எட்டு வங்கிகளை உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரில் மேலும் பலரும் பள்ளிக்கூட செலவுக்கான தொகையை ஜைரோ மூலம் இணையம் வழி செலுத்த இப்போது விண்ணப்பிக்கலாம். காகிதப் படிவங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இராது.
டிபிஎஸ்/பிஓஎஸ்பி, ஓசிபிசி, யுஓபி, பேங்க் ஆஃப் சைனா, ஹெச்எஸ்பிசி, மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், இஸ்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா ஆகியவை அந்த எட்டு வங்கிகள்.
இந்தப் புதிய ஏற்பாடு மூலம் ஜைரோ விண்ணப்பங்களைச் சில நிமிடங்களிலேயே பரிசீலனை செய்துவிட முடியும்.
இதுபற்றி கூறிய கல்வி அமைச்சின் நிதி, கொள்முதல் துறை வட்டார இயக்குநர் கிளேரன்ஸ் டேங், சேவைகளை மின்னிலக்கமயமாக்கும் அமைச்சின் ஒட்டுமொத்த முயற்சியின் ஓர் அங்கமாக இந்த நடைமுறை இடம்பெறுவதாகக் கூறினார்.

