37.3 மி. கொள்கலன்கள்: சிங்கப்பூர் துறைமுக சாதனை

37.3 மி. கொள்கலன்கள்: சிங்கப்பூர் துறைமுக சாதனை

2 mins read
77bdc53e-be29-42d0-8423-f5413c434187
-

உலக வர்த்தகம் குறைந்தாலும் 2022ல் 577.7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது

சிங்­கப்­பூர் துறை­மு­கங்­கள் வழி­யாக 2022ல் மொத்­தம் 37.3 மில்­லி­யன் 20 அடி கொள்­க­லன்­கள் சென்று இருக்­கின்­றன.

இந்த எண்­ணிக்கை, 2021ன் சாதனை அள­வான 37.6 மில்­லியன் கொள்க­லன் அள­வை­விட 0.7%தான் குறைவு.

உலகக் கொள்­க­லன் வணி­கத்­தில் சென்ற ஆண்­டில் 3 முதல் 4% சரிவு இடம்­பெற்­றது. இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூர் துறை­மு­கங்­கள் இரண்­டா­வது ஆகப் பெரிய கொள்­கலன் எண்­ணிக்கை சாத­னையை நிகழ்த்தி இருக்­கின்­றன.

இவற்றைக் கணக்­கிட்டு பார்க்­கை­யில் சிங்­கப்­பூ­ரில் கையா­ளப்­பட்டு இருக்­கும் சரக்­கு­க­ளின் அளவு 577.7 மில்­லி­யன் டன் என்று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணையம் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறின.

உல­கின் முக்­கிய நாடு­களில் உற்­பத்­தி­யும் பய­னீ­டும் சென்ற ஆண்டில் மெது­வடைந்­தன.

இத­னால் ஒட்­டு­மொத்த வர்த்­த­க­மும் கொள்­க­லன்­க­ளின் எண்­ணிக்­கை­யும் பாதிக்­கப்­பட்­டன.

இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூர் துறை­மு­கம் மீள்­தி­ற­னு­டன் ஆற்­ற­லு­டன் தொடர்ந்து திகழ்ந்து வரு­கிறது என்று நிதி, போக்­கு­வ­ரத்து துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரி­வித்­தார்.

மிக முக்­கி­ய­மாக, உல­கின் ஆகப் பெரிய இடை­வழி கப்­பல் சரக்கு போக்­கு­வ­ரத்து துறை­முகம் என்ற நிலையை சிங்­கப்­பூர் தக்­க­வைத்­துக் கொண்டு இருக்­கிறது என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் கடல்­துறை அற­நிறு­வ­னத்­தின் புத்­தாண்டு கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அமைச்­சர் பேசி­னார்.

கொவிட்-19 தொற்­றின்­போது சிங்­கப்­பூர் தனது தொடர்­பு­களை மேம்­ப­டுத்­தி­யது. கப்­பல் வழி­களுக்­கான மைய துறை­மு­கம் என்ற தன்­னு­டைய நிலையை அது பலப்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கிறது.

இதன்­ மூ­லம் உலக பொருள், சேவை வழங்­கீட்டுக் கட்­ட­மைப்பு­கள் மீள்­தி­ற­னு­டன் திகழ அது உதவி இருக்­கிறது.

அதே­வே­ளை­யில், கடல்­து­றை­யில் கரி­மக் கழி­வு­க­ளைக் குறைக்­கும் வகை­யில் மாற்று எரி­பொருள்­களை விநி­யோ­கிப்­பதில் சிங்­கப்­பூர் பல முன்­னேற்­றங்­க­ளைச் சாதித்து இருக்­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்சி இந்த ஆண்­டில் மெது­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூ­ரின் கடல்­துறை தொடர்ந்து வளர்ச்­சியைச் சாதிக்­கும் என்று தான் நம்­பு­வ­தாக திரு சீ குறிப்­பிட்­டார்.

மின்­னி­லக்­க­ம­யம், கரி­மக் கழி­வைக் குறைப்­பது ஆகி­ய­வற்­றில் வலு­வான ஆற்­றல்­களை ஏற்­ப­டுத்­திக்கொள்­வ­தன் மூலம் சிங்­கப்­பூர் தொடர்ந்து முன்­ன­ணி­யில் திகழ வேண்­டிய தேவை இருக்­கிறது என்­றும் அவர் கூறி­னார்.