355 பேரிடம் புலன்விசாரணை

355 பேரிடம் புலன்விசாரணை

1 mins read
86768aa1-0f93-4128-9d3f-3cc635c8ec38
-

பல்­வேறு மோச­டி­களில் ஈடு­பட்டு இருக்கிறார்கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில், காவல்­துறை 355 பேரை விசா­ரித்து வரு­கிறது. அந்த மோச­டி­களில் அப்­பா­வி­கள் $5 மில்­லி­யன் தொகையை இழந்திருப்­ப­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

சந்­தேக நபர்­க­ளுக்கு வயது 16 முதல் 78 வரை. அவர்­கள் 918க்கும் மேற்­பட்ட மோச­டி­களில் ஈடு­பட்டு இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

முத­லீட்டு மோச­டி­கள், வேலை, இணைய வர்த்­த­கம், இணையக் காதல், அர­சாங்க அதி­கா­ரி­கள் போல் நடித்து ஏமாற்­று­வது போன்ற பல்­வேறு மோச­டி­களில் அவர்­கள் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது.

வர்த்­தக விவ­கா­ரத் துறையைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் காவல்­து­றை­யின் ஏழு தரை நிலை­யங்­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் சேர்ந்து சென்ற டிசம்­பர் 31ஆம் தேதி முதல் இந்த மாதம் 12ஆம் தேதி­வரை இரண்டு வார காலம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யில் அந்த நபர்­கள் சிக்­கி­னர்.

அவர்­களில் 228 பேர் ஆண்­கள், 127 பேர் பெண்­கள்.

ஏமாற்­றி­யது, பணத்­தைச் சட்ட விரோ­த­மாக கையா­ளு­வது, உரி­மம் இல்­லா­மல் பணப் பட்டுவாடா சேவை நடத்­தி­யது ஆகி­ய­வற்­றில் அவர்­கள் ஈடுட்டு இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள்.

இத­னை­யொட்டி அவர்­களிடம் புலன்­வி­சா­ரணை நடக்­கிறது என்று காவல்­துறை தெரி­வித்தது.