சிங்கப்பூர்-தென்கொரியா மின்னிலக்க ஒத்துழைப்பு இணக்கம்

சிங்கப்பூர்-தென்கொரியா மின்னிலக்க ஒத்துழைப்பு இணக்கம்

1 mins read
5fdfff5f-f20b-41ea-b1ce-c8ca2c71b360
-

சிங்­கப்­பூ­ரும் தென்­கொ­ரி­யா­வும் சேர்ந்து செயல்­பட்டு மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லில் வாய்ப்­பு­களை விரி­வு­ப­டுத்த இணங்கி இருக்­கின்றன.

இதற்கு வகை செய்­யும் உடன்­பாடு நடப்­புக்கு வரு­கிறது.

'கொரியா-சிங்­கப்­பூர் மின்­னிலக்­கப் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு' என்று குறிப்­பி­டப்­படும் அந்த உடன்­பாட்­டில், சிங்­கப்­பூ­ரின் இரண்­டா­வது வர்த்­தக, தொழில் அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங்­கும் தென்­கொ­ரி­யா­வின் வர்த்­தக அமைச்­சர் அன் டுக்கியுன்னும் சென்ற ஆண்டு நவம்­பர் 21ஆம் தேதி சிங்­கப்­பூ­ரில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

அந்த உடன்­பாடு தொடர்­பில் தேவை­யான அனைத்து சட்ட நடை­மு­றை­களும் முழுமை­ அடைந்துள்ளதாக வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­தது.

புதிய உடன்­பாட்­டின் விளை வாக இரு நாடு­களும் ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­பட்டு தடை­யில்­லாத மின்­னி­லக்க வர்த்­த­கச் சூழலை உரு­வாக்­கும்.

இரு நாட்டு நிறு­வ­னங்­களுக்கும் இடை­யில் மின்­னிலக்கப் பொருளி­ய­லில் அதிக ஒத்­துழைப்பு இடம்­பெறும்.

இரு நாடுகளிலும் செயல்­படும் நிறு­வ­னங்­கள், நிதி நிறு­வனங்­களின் தக­வல்­கள் உட்­பட பல்­வேறு தக­வல்­க­ளை­யும் தங்­க­ளுக்கு இடை­யில் பகிர்ந்து ­கொள்ள அனு­ம­திக்­கப்­படும்.

இரு நாடு­களும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சி­யை­யும் வேலை வாய்ப்­பு­க­ளை­யும் அதி­கப்­ப­டுத்­தும். அனைத்­து­லக இணை­யத் தளங்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள­வும் அவற்­றுக்கு உத­வி­கள் கிடைக்­கும்.

இணை­யத்­தில் செயல்­ப­டும்­போது இரு நாடு­களும் சட்­டங்­க­ளை­யும் விதி­மு­றை­க­ளை­யும் நிலை­நாட்டி பய­னீட்­டா­ளர்­க­ளைப் பாது­காக்­க­வும் உடன்­பாட்­டில் ஏற்பாடுகள் இருக்­கின்­றன.

இயந்­திர மனி­தன் தொழில்­நுட்­பத்­தில் ஒத்­து­ழைப்பை மேம்­படுத்­த­வும் தக­வல்­க­ளைப் பரி­மாறிக்­கொள்ளவும் மூன்று புரிந்­து­ணர்வு குறிப்­பு­களி­லும் இரு நாடு­களும் கையெழுத்­திட்டு இருக்­கின்­றன.