சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் கொவிட்-19க்கு எதிரான முதலாவது ஏஆர்டி பரிசோதனைக் கருவியை சில்லறை விற்பனைக்குப் பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அந்த சுயபரிசோதனைக் கருவியை 'செல்பே' என்ற உள்ளூர் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. அந்தப் பரிசோதனைக் கருவிக்கு TEP@RT என்று பெயர்.
இப்போதைக்கு அந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 10,000 கருவிகளை உருவாக்க முடியும். இதை நாள் ஒன்றுக்கு 100,000 கருவிகள் என்ற நிலைக்கு அதிகப்படுத்த முடியும். கருவிகள் பாசிர் பாஞ்சாங்கில் உள்ள அறிவியல் பூங்கா ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.
விலை தொடர்பில் சில்லறை வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

