பொதுத்துறை மருத்துவர், பல் மருத்துவருக்கு ஊதிய உயர்வு

பொதுத்துறை மருத்துவர், பல் மருத்துவருக்கு ஊதிய உயர்வு

1 mins read
cd788ddb-f8ec-4cc2-88cd-27c315d35197
-

பொதுத் துறை­யைச் சேர்ந்த இள­நிலை மருத்­து­வர்­கள், பல் மருத்­து­வர்­க­ளுக்கு ஜன­வரி 1ஆம் தேதி முதல் அதிக சம்­ப­ளம் கிடைக்­கும்.

அவர்­க­ளின் ஊதி­யம் மறு­பரி­சீ­லனை செய்­யப்­பட்­டதை அடுத்து அவர்­கள் அதிக சம்­பளம் பெறு­வார்­கள் என சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக பட்­டம் பெற்­ற­வர்­கள், முத­லாண்டு மருத்­துவ அதி­கா­ரி­க­ளின் ஊதி­யம் 7% முதல் 13% வரை உய­ரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரயிறுதி நாட்­களில் வேலை பார்ப்­போ­ருக்­குப் புதிய ஊக்­கத்­தொகை ஒன்­றும் நடை­மு­றைக்கு வரும்.

மருத்­து­வர்­கள், பல் மருத்து­வர்­க­ளின் சம்­ப­ளம், இதற்கு முன் 2019ல் திருத்­தப்­பட்­டது.

பட்­டம் பெற்று உடனே வேலை பார்க்­கும் மருத்­து­வரின் முத­லாண்டு மாத ஊதி­யம் $4,500 என்­ப­தும் மருத்­துவ அதி­கா­ரி­யின் சம்­ப­ளம் $6,200 என்­ப­தும் இன்­டீட் என்ற இணைய வேலை வாய்ப்­புக் களஞ்­சி­யம் மூலம் தெரி­கிறது.