செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
17af9b4c-b008-48c7-b28c-ee75c4a76f42
-

ஜாமியாவின் முன்னாள் ஊழியருக்கு

16 வாரச் சிறை

அரசு சார்பற்ற அமைப்பான ஜாமியா சிங்கப்பூரால் நடத்தப்படும் போதையர் மறுவாழ்வு இல்லத்தில் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய இஸ்மாடி இஷாக் அங்கு வசிக்கும் இருவரிடமிருந்து $1,850 லஞ்சம் பெற்றார். ஜாமியா போதையர் மறுவாழ்வு இல்லத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையைக் கண்காணிக்கும் அதிகாரியான 53 வயது இஸ்மாடிக்கு, அந்த இருவரிமிருந்து நான்கு முறை மொத்தம் $950 லஞ்சம் பெற்றதற்காக நேற்று 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1,000 ஐடிஇ மாணவர்களுக்குப் பயிற்சி

உள்ளூர் மாணவர்களுக்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சியை அளிக்கும் வகையில் கூகல் நிறுவனம், தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து 1,000 மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் இந்த இணையவழி பயிற்சி, தரவுப் பகுப்பாய்வு, இயந்திரவியல் கற்றல் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரும். இந்நிகழ்ச்சியில் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.