ஜூரோங் வட்டாரத்தில் கொட்டும் மழையில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை திடீரென்று நிறுத்தியதில், சாலையில் விழுந்தார். கிட்டத்தட்ட 25 மீட்டர் தூரம் வரை அவர் உட்கார்ந்த நிலையில் சாலையில் சறுக்கி சென்றார்.
இந்த சம்பவம் ஜூரோங் டவுன் ஹால் சாலையில் ஜனவரி 13ஆம் தேதியன்று நடந்தது. அந்த இடத்தில் உள்ள கேமராவில் சம்பவம் பதிவானது.
சாலையில் சறுக்கி செல்லும்போது ஓட்டுநர் முகத்தில் எந்தவொரு பதற்றமும் தெரியவில்லை. அதற்கு மாறாக அவர் மிக நிதானமாக இருந்தார்.
ஒரு வழியாக, ஓட்டுநர் எழுந்துநின்று, தனது மோட்டார்சைக்கிளை நோக்கி நடப்பது காணொளியில் தெரிகிறது. சாலையில் அவ்வளவு தூரம் சறுக்கிய போதிலும், ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
காணொளியை பார்த்த பலரும் ஓட்டுநரின் நிதானத்தை மெச்சினர்.

