100 பானைகளில் பொங்கல் பொங்கிய கொண்டாட்டம்

100 பானைகளில் பொங்கல் பொங்கிய கொண்டாட்டம்

2 mins read
32943866-1431-4510-83af-f2aa079af5ed
-
multi-img1 of 2

பொன்­மணி உத­ய­கு­மார்

தனது 100வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களில் ஓர் அங்க மாக இந்­தி­யர் சங்­கம், நேற்று 100 பானை­களில் பாரம்­ப­ரிய முறை­யில் பொங்­கல் சமைக்­கும் கொண்­டாட்­டத்தை லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் மரபுடைமைச் சங்­கத்­து­டன் இணைந்து ஏற்பாடு செய்தது.

இந்­தி­யர் சங்க வளா­கத்­தில் நடை­பெற்ற இந்தக் கொண்­டாட் டத்­தில் குடும்­பங்­கள், நண்­பர்­கள், சக ஊழி­யர்­கள் எனப் பலர் குழுக்­க­ளாக கலந்துகொண்­ட­னர்.

ஈராண்­டு­க­ளுக்குப் பிறகு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நீங்கி முழு­வீச்­சில் நடை­பெற்ற இந்­தக் கொண்­டாட்­டத்­தில், இந்­தி­யர்­கள் மட்­டு­மன்றி மற்ற இனத்­த­வர்­களும் கலந்து கொண்டு மகிழ்ந்­த­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களும் இம்­முறை கொண்­டாட்­டத்­தில் இணைந்­த­னர்.

வெளிப்­பு­றத்­தில் பொங்­கல் கொண்­டாட்­டம் நடை­பெற்­றது. மழை, வெயில், பலத்த காற்று போன்ற சிக்­கல்­கள் இருந்­தா­லும் மக்­கள் மகிழ்ச்­சி­யோடு இறுதி வரை பொங்­கல் குதூ­க­லத்தைக் கைவி­டா­மல் இருந்­த­னர்.

இந்­தி­யர் சங்­கத்­துக்கு வந்த வர்­கள் ஆனந்­த­த்து­டன் திரும்­பி­யது தனக்கு மன­நி­றைவு அளித்­த­தாக இந்­தி­யர் சங்க பெண்­கள் பிரி­வின் தலைவி திரு­மதி விஜயா சிகா­மணி, 50, கூறி­னார்.

பொங்கல் கொண்டாடத்தில் தன் சக ஊழியர்களுடன் கலந்து கொண்ட மனிதவள நிர்வாகியான பிரேமலதா, 39, கலாசாரத்துடன் ஒன்றி விழாவைக் கொண்டாட நேற்றைய நிகழ்வு வழிவகுத்த தாகக் கூறினார்.

அதோடு, தமிழ்க் கலா சாரத்தை பற்றி தன் சக ஊழி யர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.

உறவினரின் நான்கு வயது மகன் மிலான் ஓஷனுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காயத்திரி, 33, தமிழ்க் கலாசாரம் குறித்து கற்றுக்கொடுக்க கொண்டாட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றார்.

இத்தகைய சுவாரசியமான கொண்டாட்டங்கள் இந்திய சமூ கத்திற்கு வலுசேர்க்கும் என்று அவர் கூறினார்.

வீட்டில் பொங்கல் சமைத்து பிரார்த்தனைகளை முடித்து விட்டு பொங்கல் கொண்டாட வந்திருந்தனர் தோழிகளான ராஜம்மாள் இந்திராணி, மணி மேகலை.

இவர்கள், தமிழ்ப் பாரம் பரியங்கள் பற்றி இளையர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என் பதற்காக இந்தியக் கொண்டாட் டங்களில் கலந்து கொண்டு ஊக்குவித்து வருகின்றனர்.

கூட்டுப் பொங்கலுடன், இந்தியர் சங்க வளாகத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கபடி விளையாட்டு, கயிறு இழுக்கும் போட்டி, கோலப் போட்டிகளும் நடைபெற்றன. கபடிப் போட்டியில் மொத்தம் எட்டுக் குழுக்கள் பங்கேற்றன.

இது மாதிரியான பொங்கல் கொண்டாட்டங்கள்தான் தங் களுக்கு பொங்கல் விழா உணர்வைத் தருகின்றன என்று கபடிப் போட்டியில் கலந்து கொண்ட ஊழியர்கள் கூறினர்.

கபடி விளையாட்டுக்கு மத்திய கபடி சங்கம் ஏற்பாடு செய்தது. அச்சங்கத்தின் உள்ளூர் நிகழ்வு, போட்டிகள் பிரிவின் தலைவரான சௌத்ரி, 24, வெளிநாட்டு ஊழியர்களை பொங்கல் அன்று ஒன்றிணைத்துக் கொண்டாடி யது சிறப்பான அம்சம் என்று குறிப்பிட்டார்.