$2 பி. செயல் திட்டம்; புதிய முறிகள் வெளியீடு

2 mins read
46c9f35c-8ec1-48aa-9d58-1d80a6ac58cb
கரி­மத்தை அதி­க­மாக வெளி­யேற்­றும் நிறு­வ­னங்­களும் அர­சாங்க அமைப்­பு­களும் கரி­மக் கழி­வைக் குறைப்­பதை இலக்­கா­கக்கொண்டு முறி­கள் நிதியுதவி அளிக்கும். படம்: சீன ஊடக குழுமம் -

சுற்­றுப்­பு­றத்­துக்குக் கேடு விளைவிக் ­காத கரி­மக் கழி­வற்ற எரி­பொ­ரு­ளுக்கு மாற சிங்­கப்­பூர் பகீ­ரத முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. அதே சம­யத்­தில் எரி­பொ­ருள் சந்தை பாதிக்கக்கூடாது என் ­ப­தில் அது கவ­ன­மாக இருந்து வரு­கிறது.

இந்த நிலை­யில் கரி­மக் கழி­வில்­லாத எரி­பொ­ரு­ளுக்கு மாறு­ வ­தற்­குத் தேவை­யான நிதி­யைத் திரட்ட, புதிய முறி­களை வெளி­யிட எரி­சக்தி சந்தை ஆணை­யம் திட்­ட­மிடுவதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் மூல­ம் அறி­யப்­ப­டு­கிறது.

இரண்டு பில்­லி­யன் டாலர் பல நாணய செயல் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக பசுமை முறி­கள் வெளி­யி­டப்­ப­டு­ம் என எதிர்பார்க்கப் படுகிறது. பசு­மை முறி­கள், சுற்றுச்­ சூ­ழ­லுக்கு நன்­மை­ய­ளிக்­கும் திட்­டங்­க­ளுக்கு நிதி­ய­ளிக்­கப் பயன்­படுத்தப்படும்.

கரி­மத்தை அதி­க­மாக வெளி­யேற்­றும் நிறு­வ­னங்­களும் அர­சாங்க அமைப்­பு­களும் கரி­மக் கழி­வைக் குறைப்­பதை இலக்­கா­கக்கொண்டு முறி­கள் நிதியுதவி அளிக்கும்.

தற்­போது இயற்கை எரி­வா­யு­வைப் பயன்­ப­டுத்­தும் ஆலை­கள் கரி­மக் கழி­வைக் குறைக்க உத­வும் இயற்கை எரி­வாயு திட்­டத்­திற்கு மாற­வும் முறி­கள் கைகொ­டுக்­கும்.

இது பற்றிப் கருத்­து­ரைத்த ஓசி­பிசி வங்­கி­யின் கடன்­பற்று ஆய்வு பகுப்­பாய்­வா­ளர் இஸி­யன் ஹு, முறி­கள் வெளி­யி­டப்­பட்­டால் எரி­பொ­ருள் சந்தை ஆணை­யத்­தின் முதல் முயற்­சி­யாக அது இருக்­கும் என்­றார்.

பல­த­ரப்­பட்ட நிலைத்­தன்­மை­மிக்க உள்­கட்­ட­மை­ப்புகளுக்கு பல பொது அமைப்­பு­கள் இத்­த­கைய வழி­யைப் பின்­பற்­றி­யுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

புதிய முறி­கள், வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்­கும் அனு­ம­தி­ய­ளிக்­கும் எனத் தெரி­கிறது.

ஆனால் இது பற்றி விளக்­கம் அளிக்க எரி­பொ­ருள் சந்தை ஆணை­யம் மறுத்­து­விட்­டது.

சிங்­கப்­பூ­ரின் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தில் மின்­சா­ரத் துறை­யின் பங்கு மட்­டும் 40 விழுக்­கா­டா­கும்.

இந்த நிலை­யில் சிங்­கப்­பூ­ரின் எரி­சக்தி விநி­யோ­கம் பாதிக்கப் படா­மல் 2050ஆம் ஆண்­டுக்­குள் கரிம வெளி­யேற்­றத்­தில் பூஜ்­யத்தை எட்­டும் நோக்­கத்­தில் ஆணை­யம் செயல்­பட்டு வரு­கிறது.