லிட்டில் இந்தியாவில் பொங்கல் விநியோகம்

லிட்டில் இந்தியாவில் பொங்கல் விநியோகம்

2 mins read
83aaa4ab-072a-429e-99f3-443def8103d7
-

அனுஷா செல்­வ­மணி

தமி­ழர் பண்பாட்டுக் கூறு­களை எடுத்­து­ரைக்­கும் திரு­நா­ளான பொங்­கலை இந்­தாண்டு கோலா­க­ல­மாக கொண்­டா­டி­யது ஆத­ர­வற்­றோ­­ரை­யும் நினைத்­துப்­பார்க்­கும் வகை­யில் இருந்­தது, லிஷா நேற்று பிற்­ப­கல் ஏற்­பாடு செய்­தி­ருந்த பொங்­கல் பகிர்­தல்.

திறந்­த­வெ­ளி­யில் இடம்­பெற்ற இந்­நி­கழ்­வில், சன்­லவ் இல்­லம், ஸ்ரீ நாரா­யண மிஷன், ஜாமியா முதி­யோர் இல்­லம் ஆகிய மூன்று இல்­லங்­களை சேர்ந்த 56 இல்லவாசி­ க­ளுக்கு இல­வச உண­வும் பொங்­கலும் வழங்­கப்­பட்­டன.

மத்­திய சமூக மேம்­பாட்டு மன்­ற மேயர் திருமதி டெனிஸ் புவா லே பெங், நிகழ்­வில் கலந்துகொண்டு சிறப்­பித்­தார். இல்லவாசி­க­ளு­டன் உரை­யா­டி­ய­தோடு, பொங்­கல் திருநா­ளின் சிறப்­பை­யும் அவர்­க­ளி­டம் பகிர்ந்­தார்.

சன்­லவ் இல்­ல­வா­சி­யான திரு­மதி மணி­மே­கலை, 61, "உணவை சுவைத்­த­து­டன் கலை நிகழ்ச்­சிகளையும் காண­ஆவலுடன் காத்­துக்­கொண்­டு இருந்தேன்." என்­றார்.

நிகழ்­வின் இறு­தி­யில் இல்­ல­வா­சி­க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகளும் $20 பற்­று­சீட்­டும் வழங்­கப்­பட்­டு, கால்­ந­டை­களை கண்டு மகி­ழ­வும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீ நாரா­யண மிஷனைச் சேர்ந்த 90 வயது திரு­வாட்டி சண்­மு­கத்­தாயி, நேற்று கால் ­ந­டை­களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

கால்­ந­டை­களைக் காணும் இதுபோன்ற நிகழ்­வுக்கு தன்­னு­டைய நன்­றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதன் தொடர்ச்­சி­யாக, மாலை ஆறு மணிக்கு லிட்­டில் இந்­தியா ஆர்­கேட்­டின் வெளிப்­பு­றத்­தில் இலவசமாக பொங்­கல் விநியோகிக்கப்பட்டது.

லிஷா ஏற்­பாடு செய்­தி­ருந்த பொங்­கல் பகிர்­த­லில் கிட்­டத்­தட்ட 10,000 பொது­மக்­கள் பயன் அடைந்தனர்.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப்­பெ­ரு­மாள் கோயி­லும், ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் கோயி­லும் இணைந்து தயா­ரித்த சர்க்­கரை பொங்­கலை சுவைக்க, லிட்­டில் இந்­தியா ஆர்­கேட்­டிலிருந்து தேக்கா ப்ளேஸ் கடைத்­தொ­குதி வரை பலர் வரி­சை­யில் காத்திருந்தனர்.