2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்; சிங்கப்பூரர்கள், நிறுவனங்களின் எதிர்பார்ப்பு

2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்; சிங்கப்பூரர்கள், நிறுவனங்களின் எதிர்பார்ப்பு

3 mins read
39fb1bc3-5e41-4d1b-8f58-e199bac3c75f
கொவிட்-19 தொற்­றுப் பிடியிலி­ருந்து ஒரு வழி­யாக மீண்டு வந்­துள்ள சிங்­கப்­பூர், மேற்­கண்ட சவால்­க­ளால் பொரு­ளி­யல் பாதிப்புகளைச் சந்­தித்து வரு­கிறது. படம்: சீன ஊடக குழுமம் -

வரும் பிப்­ர­வரி 14ஆம் தேதி வரவு செல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­ப­ட­வுள்ள நிலை­யில் அது குறித்த எதிர்­பார்ப்­பு­களும் நம்­பிக்­கை­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

எதிர்­கால பொரு­ளி­யல் பிர­கா­ச­மாக இல்­லா­த­தால் பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­ப­ட­லாம் என்று நிபு­ணர்­கள் கணித்­துள்­ள­னர். புவி­சார் அர­சி­யல் பதற்­ற­மும் ஓய்ந்­த­பா­டில்லை.

இவை, சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளை­யும் கவலை அடை­யச் செய்­துள்­ளன.

கொவிட்-19 தொற்­றுப் பிடி யிலி­ருந்து ஒரு வழி­யாக மீண்டு வந்­துள்ள சிங்­கப்­பூர், மேற்­கண்ட சவால்­க­ளால் பொரு­ளி­யல் பாதிப்பு களைச் சந்­தித்து வரு­கிறது.

குறிப்­பாக விமா­னத் துறை, உணவு மற்­றும் குளிர்­பா­னத்­துறை போன்­றவை பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் பேசிய தனிப்­பட்­ட­வர்­களும் ஊழி­யர்­களும் நிறு­வ­னங்­களும் இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தில் அர­சாங்­கத்­தின் ஆத­ரவு தொடர வேண்­டும் என்று வலி யுறுத்­தி­யுள்­ள­னர். குறு­கிய, நீண்­ட­கால உத­வித் திட்­டங்­களை எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

பிப்­ர­வரி 14ஆம் தேதி அன்று வரவு செல­வுத்­திட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய வுள்ள துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்­கைச் செல­வின கவ­லை­க­ளுக்­கான உத­வி­களை எந்த அளவு மேலும் மேம்­ப­டுத்­து­வது என்­பது குறித்து அர­சாங்­கம் சிந்­தித்து ஆலோ­சித்து வரு­வ­தாக கடந்த ஜன வரி­யில் கூறி­யி­ருந்­தார். இதற்­காக சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­து­களும் அறி­யப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தில் உள்ள லீ குவான் இயூ பொதுக் கொள்­கை­யின் இணைப் பேரா­சி­ரி­ய­ரான டெரன்ஸ் ஹோ, பொரு­ளி­யல் மெது­வ­டைந்து பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் குடும்­பங் களுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் மேலும் ஆத­ர­வு­கள் வரவு செல­வுத் திட்­டத்­தில் இடம்­பெ­ற­லாம் என்­றார்.

பசுமை மாற்­றம் போன்ற பொரு­ளி­யல் கட்­ட­மைப்பு மாற்­றங்­க­ளைக் கருத்­தில் கொண்டு, மாற்­றத்­திற்­கான ஆத­ரவு தொடர்ந்து தேவைப்­படும் என்­றும் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய ஊழி­யர்­க­ளுக்­கும் ஊதி­யம் மற்­றும் வேலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் தேவை என்­றும் அவர் கூறி­னார்.

"இருந்­தா­லும் கால­வ­ரை­யற்ற ஆத­ர­வுக்­கான எதிர்­பார்ப்பு களைத் தவிர்க்க அர­சாங்­கம் விரும்­பு­கிறது," என்­றார் அவர்.

வர்த்­தக நிறு­வ­னங்­களை சீர­மைக்­க­வும் அவற்­றின் ஆற்­ற­லைப் பெருக்­க­வும் நீண்­ட­கால முன்­னு­ரி­மை­க­ளுக்கு வரவு செல­வுத் திட்­டத்­தில் முக்­கி­யத்­து­வம் அளிக்க வாய்ப்­புள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

யுஓபி வங்கியின் மூத்த பொரு­ளி­யல் நிபு­ண­ரான ஆல்­வின் லியவ், அதி­க­ரிக்­கும் செல­வி­னங்­கள், பண­வீக்­கம் ஆகி­ய­வற்றை சிங்­கப்­பூ­ரர்­கள் சமா­ளிக்க கூடு­தல் உத­வி­கள் வழங்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கி­றார்.

அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் குறிப்­பாக குறைந்த வரு­மா­னம் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு பொருள் சேவை வரி­யின் தாக்­கத்­தைக் குறைப்­ப­தற்­காக 2020ஆம் ஆண்­டில் முதல் முத­லில் உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. இந்­தத் திட்­டத்­தின் கீழ் 500 மில்­லி­யன் வெள்ளி முதல் ஒரு பில்­லி­யன் வெள்ளி வரை உதவி அதி­க­ரிக்­கப்­ப­ட­லாம் என்று அவர் தெரி­வித்­தார்.

தனிப்­பட்­ட­வர்­க­ளின் வரு­மான வரி விதிப்­பி­லும் மாற்­றம் இருக்­க­லாம் என்று சிலர் நம்­பு­கின்­ற­னர்.

கொவிட்-19 தொற்­றுக்­குப் பிறகு சில நிறு­வ­னங்­கள் மீண்டு வரு­வ­தில் சிர­மங்­களை எதிர் நோக்­கு­கின்­றன. கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக சரி­யான வரு மானம் இல்லை. மேலும் இரண்டு ஆண்­டு­க­ளாக பய­னற்­றுக் கிடந்த இயந்­தி­ரங்­கள், கணி­னி­கள், அடிப்­படை வச­தி­க­ளைப் புதுப்­பிக்க வேண்­டிய அவ­சி­யத்­தில் அவை உள்­ளன. இத­னால் கொவிட்-19 தொற்­றுக்­குப் பிறகு மீண்டு வர சிர­மப்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏதா­வது ஒரு வகை­யில் உதவி கிடைக்­கும் என அவை பெரி­தும் எதிர்­பார்க்­கின்­றன.